Annamalai
Annamalai

3-ஆம் உலகப்போரைத் தடுக்கும் திறன் மோடிக்குதான் உள்ளது – அண்ணாமலை!

Published on

கோவை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளரும், பாஜக தலைவருமான அண்ணாமலை இன்று கோவையின் சில இடங்களில் பிரச்சாரம் செய்து வருகிறார். அந்தவகையில், பிரச்சாரத்தில் அண்ணாமலை 3ம் உலகப்போரைத் தடுப்பதற்கான திறன் மோடிக்குதான் உள்ளது என்று பேசினார்.

உலக நாடுகளின் பல பகுதிகளில் போர் பதற்றம் நிலவி வருகிறது. ரஷ்யா – உக்ரைன் போர் நடைபெற்று வருகிறது. இதனைத்தொடர்ந்து இஸ்ரேல் – ஈரான் இடையே பதட்டமான சூழல் நிலவிவருகிறது. வருங்காலத்தில் சவுதி அரேபியாவிலும் போர் வெடிக்கும் என்று கருதப்படுகிறது. இப்படி பல நாடுகளில் போர்ப் பதற்றம் நிலவி வருவதால், மூன்றாம் உலகப்போர் வெடிக்க வாய்ப்புள்ளது என்றும் வல்லுநர்கள் கணிக்கின்றனர்.

சில நாடுகளில் போர்ப் பதற்றம் இருந்து வரும் நிலையில், தற்போது இந்தியாவில் லோக்சபா தேர்தல் நடைபெறவுள்ளதால், அதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

அந்தவகையில் ஏப்ரல் 19ம் தேதி தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. அந்தவகையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவை தொகுதியில் போட்டியிடவுள்ளார். இதனையடுத்து இன்று சூலூர் உட்பட பல பகுதிகளில் அண்ணாமலை பிரச்சாரம் செய்து வருகிறார். செலக்கரிச்சல், அப்பநாயகன்பட்டி, பாப்பம்பட்டி, கள்ளப்பாளையம் ஆகிய பகுதிகள் வழியாக அண்ணாமலை தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். இதில், பல்வேறு விவசாய சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

இதில் அண்ணாமலை பேசியதாவது, “1972ம் ஆண்டு விவசாயிகளுக்கான மின் கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி போராட்டம் நடத்தி உயிரைவிட்ட தியாகிகளின் விவசாய சங்கத்துடன் இணைந்து பிரச்சாரம் செய்வதில் நான் பெருமை கொள்கிறேன். உலகளவில் பல நாடுகள் போர் செய்து வருகின்றன. இதனால், மூன்றாம் உலகப்போர் வரும் சூழல் உருவாகியுள்ளது. இந்தப் போரைத் தடுக்கும் திறன்கொண்ட உலகத் தலைவராக மோடி திகழ்கிறார்.

போர்களை நிறுத்தி உலக அமைதியை கொண்டு வரும் திறன் மோடிக்கே உள்ளது. இந்தியாவிற்கு மட்டுமல்ல மோடி உலகத்திற்கான தலைவராகத் திகழ்கிறார். அவருடைய பேச்சுகளும், கருத்துகளும் உலகளவில் மதிக்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
அண்ணாமலை மீது 6 சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு! காரணம் என்ன?
Annamalai

நமது நாட்டின் வளர்ச்சிக்காகவும், உலக அமைதிக்காகவும் மீண்டும் பிரதமராக மோடி வர வேண்டும். இந்தத் தேர்தல் நாட்டை ஆளக்கூடிய பிரதமரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். இம்முறை, 400க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைப் பெற்று மோடி பிரதமராக வேண்டும்.” என்று பேசினார்.

logo
Kalki Online
kalkionline.com