
தமிழகத்தின் அரியலூர், பெரம்பலூர், தஞ்சை ஆகிய மாவட்டங்களுக்கு, வரும் 27, 28-ம் தேதிகளில் பிரதமர் மோடி வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி அரியலூர், பெரம்பலூர், தஞ்சை மாவட்டங்களுக்கு வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.கங்கை கொண்ட சோழபுரம் ஆடி திருவாதிரை நிகழ்வில் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள், மத்திய அரசு அதிகாரிகள், இந்திய தொல்லியல் துறை அதிகாரிகள், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் கங்கைகொண்ட சோழபுரத்தில் முகாமிட்டு, தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
முன்னதாக ஜூலை 26-ம் தேதி கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதமர் மோடி அதற்கு அடுத்த நாள் தமிழகம் வருகிறார்.