

மதுராந்தகம் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கப் பிரதமர் மோடி தமிழகம் வந்துள்ள நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் "தமிழ்நாட்டிற்கு NDA செய்த துரோகங்கள்" என்ற தலைப்பில் கேள்விகளைக் கேட்டு பதிவிட்டுள்ளார் .
Tamil Nadu counts the betrayals of NDA.
தேர்தல் சீசன் வந்தால் மட்டும், தமிழ்நாடு பக்கம் அடிக்கடி வரும் மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களே...
தமிழ்நாட்டுக்குத் தரவேண்டிய 3,458 கோடி ரூபாய் #SamagraShiksha கல்வி நிதி எப்போது வரும்?
#Delimitation-இல் தமிழ்நாட்டின் தொகுதிகள் குறைக்கப்படாது என்ற உறுதிமொழி உங்கள் வாயில் இருந்து எப்போது வரும்?
பா.ஜ.க.வின் முகவர்போல் செயல்படும் ஆளுநரின் அராஜகம் எப்போது முடிவுக்கு வரும்?
தமிழ்ப்பாசத்தில் தமிழர்களை மிஞ்சியதாய்க் காட்டிக்கொள்ளும் உங்கள் அரசிடம் இருந்து தமிழுக்குரிய நிதி ஒதுக்கீடு எப்போது வரும்?
"#MGNREGA தொடரும், மாநிலங்கள் மீது நிதிச் சுமையை ஏற்றி ஊரக மக்களின் வாழ்வாதாரத்தை ஒழித்துக் கட்டும் #VBGRAMG கைவிடப்படும்" என வாக்குறுதி எப்போது வரும்?
பத்தாண்டுகளாக 'இன்ச் இன்ச்'சாக ஒன்றிய பா.ஜ.க. அரசு இழைத்து வரும் மதுரை #AIIMS எனும் எட்டாவது உலக அதிசயம் எப்போது எங்கள் கண்முன் வரும்?
இயற்கைப் பேரிடர்களுக்காக நாங்கள் கேட்ட நிவாரணத் தொகை எப்போதுதான் வரும்?
ஓசூர் விமான நிலையம், கோவை & மதுரை மெட்ரோ திட்டங்களுக்கு எப்போது ஒப்புதல் வரும்?
கீழடி அறிக்கை எப்போது வெளியே வரும்?
ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டு மக்களின் ஒருமனதான கோரிக்கையான #NEET விலக்கு எப்போது அமலுக்கு வரும்?
தொடர்ந்து துரோகங்களை மட்டுமே செய்யும் பா.ஜ.க. கூட்டணிக்குத் தமிழ்நாடு எப்போதுமே தோல்வியைத்தான் தரும்!
இந்த எக்ஸ் தள பதிவுகள் பரபரப்பை தந்த நிலையில் தற்போது சட்டப்பேரவையில் 100 நாள் வேலைத்திட்டம் குறித்து தீர்மானம் முதல்வரால் முன்மொழியப்பட்டது.தொடந்து தற்போது 100 நாள் வேலை திட்டம் தொடர்பான தீர்மானத்தை சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் முன்மொழிந்து வருகிறார்.
அத்தீர்மானத்தில், "மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை (100 நாள் வேலைத் திட்டம்) அதன் பெயரிலேயே தொடர்ந்து செயல்படுத்த மத்திய அரசை வலியுறுத்தி முதல் அமைச்சர் தனி தீர்மானம் கொண்டு வந்தார்.
தொடர்ந்து தமிழ்நாட்டை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது. மாநில செயல்திறன் அடிப்படையில் 100 நாள் வேலை திட்டத்திற்கான நிதியை ஒதுக்க வேண்டும் என 100 நாள் வேலை திட்டம் குறித்து சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்த நிலையில் முதல்வர் அறிவித்துள்ளார்.
ஏற்கனவே இருந்த 100 நாள் வேலைத்திட்டத்தில் முந்திய ஆண்டுகளின் ஒதுக்கீட்டிற்கு குறையாமல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் .100 நாள் வேலைத்திட்ட நிதி ரூபாய் 2113 கோடி நிலுவையில் உள்ளது. மாநில அரசின் நிதி பங்களிப்பை 40 சதவீதம் உயர்த்தினால் நிதி சுமை அதிகரிக்கும்.பிரதம மந்திரி கிராம சபைத் திட்டத்தில் ரூபாய் 516 கோடி நிதி இன்னும் விடுவிக்கப்படாமல் உள்ளது. மாநில செயல் திறன் அடிப்படையில் 100 நாள் வேலை திட்டத்திற்கான நிதியை ஒதுக்க வேண்டும் நிதி விடுவிப்பில் தாமதம் செய்கிறது மத்திய அரசு. தமிழ்நாட்டில் இத்திட்டத்தின் கீழ் சுமார் 74 லட்சம் பேர் பயனடைந்து வருவதால், அவர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு மாநிலச் செயல்திறன் அடிப்படையில் உரிய நிதியை விரைந்து ஒதுக்க வேண்டும் எனத் தீர்மானத்தை முன்மொழிந்து உரையாற்றினார்.