தமிழகம் வரும் வழியில் பிரதமர் மோடி தமிழில் போட்ட ட்வீட் வைரல்..!

பிரதமர் மோடி
பிரதமர் மோடி
Published on

தமிழகம் வருவதற்கு முன்பாக தனது சமூக வலைதளத்தில் திமுக ஆட்சி தொடர்பாக கருத்து தெரவித்துள்ள பிரதமர் மோடி, தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் தமிழ்நாடு இருக்கிறது என்று தமிழில் பதிவிட்டுள்ளார்.

பிரதமர் மோடி வெளியிட்ட பதிவியில் தெரிவித்திருப்பதாவது:

“தமிழ்நாடு தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் இருக்கிறது!

மதுராந்தகத்தில் இன்று பிற்பகலில் நடைபெறும் பேரணியில் நான் தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்களுடன் கலந்துகொள்ளவிருக்கிறேன். ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது என்று தமிழ்நாடு முடிவு செய்துவிட்டது. தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் சாதனையும் பிராந்திய பெருவிருப்பங்கள் மீதான அதன் அர்ப்பணிப்பும் மாநில மக்கள் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்:
தேசிய ஜனநாயக கூட்டணியின் மெகா பொதுக்கூட்டம்: தென் மாவட்டப் போக்குவரத்தில் மாற்றம்; பாதுகாப்புத் தீவிரம்!
பிரதமர் மோடி

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com