தமிழக சுகாதாரத் துறை சார்பில் குரங்கு காய்ச்சல் முன்னெச்சரிக்கை ஆய்வு கூட்டம்!

குரங்கு காய்ச்சல் முன்னெச்சரிக்கை ஆய்வு கூட்டம்
குரங்கு காய்ச்சல் முன்னெச்சரிக்கை ஆய்வு கூட்டம்
Published on

லக சுகாதார நிறுவனம், குரங்கு காய்ச்சல் நோயை சர்வதேச அக்கறையின் பொது சுகாதார அவசர நிலையாக (PHEIC) அறிவித்ததைக் கருத்தில் கொண்டு, மாநிலத்தில் சுகாதார வசதிகளின் தயார் நிலையை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையால் ஆய்வு செய்யப்பட்டது.

அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹு கண்காணிப்பின் நிலை, தனிமைப்படுத்தப்பட வேண்டியதன் அவசியம் மற்றும் நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்கான நிலையான செயல்பாட்டு நெறிமுறை குறித்து விவாதித்தார். ஒன்றிய அரசு குரங்கு காய்ச்சலை பரிசோதிப்பதற்கான அங்கீகரிக்கப்பட்ட / அனுமதிக்கப்பட்ட மையமாக சென்னையில் உள்ள கிங் இன்ஸ்டிட்யூட்டை ஒன்றிய அரசால் இனம் காணப்பட்டு உள்ளது. இருப்பினும், குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிகழ்வேதும் இதுவரை மாநிலத்தில் பதிவாகவில்லை.

மேலும், கண்காணிப்பு நெறிமுறையை மேம்படுத்தவும், மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவர்களுக்கான பயிற்சித் திட்டத்தை நடத்தவும் மருத்துவத்துறை அதிகாரிகள் கேட்டுக்கொள்ளப்பட்டனர். நோய் பரவல் குறித்து கண்காணிப்பை தீவிரப்படுத்தவும், நிலைமையை தொடர்ந்து கண்காணிக்கவும் மருத்துவத்துறை முடிவு செய்து இருக்கிறது.

தமிழக மருத்துவத் துறையும், தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தின் மூலம் ஒன்றிய அரசாங்கத்தின் சுகாதார அமைச்சகத்துடன் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்தி இந்நோய் குறித்து தொடர் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதையும் படியுங்கள்:
அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் நடைபெற்ற திரைப்படத் துறையினர் நலவாரியக் குழுக் கூட்டம்!
குரங்கு காய்ச்சல் முன்னெச்சரிக்கை ஆய்வு கூட்டம்

இந்தக் கூட்டத்தில் ஷில்பா பிரபாகர் சதீஷ் குழும இயக்குநர் - தேசிய சுகாதார நலக்குழுமம்,  எம்.அரவிந்த் மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு மருத்துவப்பணிகள் கழகம், டாக்டர் ஏ.அருண் தம்புராஜ் திட்ட இயக்குநர், தமிழ்நாடு சுகாதார திட்டம், ஆர்.சீதா லட்சுமி திட்ட இயக்குநர், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம், எம்.விஜயலட்சுமி இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை ஆணையர், வி.கலையரசி சிறப்பு செயலாளர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, டாக்டர் T.S. செல்வவிநாயகம் இயக்குநர், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை, டாக்டர் J.சங்குமணி இயக்குநர், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி, டாக்டர் J.ராஜமூர்த்தி இயக்குநர் மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் பிற உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com