காற்று மாசுபடிதல் காரணமாக உலகளவில் அதிக மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக வெளியான தகவல் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
மனிதர்களுக்கு மட்டுமல்ல உலகின் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் முக்கியமான ஒன்று காற்று. காற்று இல்லையேல் எந்த உயிரினங்களாலும் சுவாசிக்க முடியாது. இதனால் தாவரங்கள் முதல் மனிதர்கள் வரை யாருமே வாழ முடியாத ஒரு இடமாக மாறிவிடும் இவ்வுலகம்.
காற்று நமக்கு எளிதாக கிடைக்கிறது. ஆனால், சுத்தமாகத்தான் கிடைப்பதில்லை. அதற்கு காரணம் இயற்கை அல்ல. அதற்கு ஒரே காரணம் மனிதர்கள்தான். மனிதர்களின் தொழில்நுட்ப வளர்ச்சி இயற்கைக்கு பல இடையூறுகளை தருகிறது என்பதை நாம் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும். இந்த காற்று மாசுபடிதல் காரணமாக பல கோடி மக்கள் கஷ்டப்படுகிறார்கள்.
காற்று மாசுபாட்டினால் ஏற்படும் சுவாச நோய்களால் உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 7 மில்லியன் மக்கள் இறப்பதாக ஆய்வுகள் வெளியாகியுள்ளன. இப்படியே காற்று மாசுபாட்டை கண்டுக்கொள்ளாமல் விட்டால், பொருளாதார ரீதியாகவும் பல விளைவுகளை சந்திக்க கூடும் என்று எச்சரிக்கப்படுகிறது.
மாசுபட்ட காற்று நமது வீடுகளுக்கு வரும்போது, அது பெரும்பாலும் பல்வேறு நோய்களை ஏற்படுத்துகிறது என்று கூறப்படுகிறது. சில கூறுகள் நுரையீரலுக்குள் நுழையும் போது, புற்றுநோய் பாதிப்பு அதிகரிக்கிறது. புகைப்பிடிப்பவர்களில் இந்த நிலை காணப்பட்டாலும், புகைபிடிக்காதவர்கள் மற்றும் பெண்களில் காற்று மாசுபாடு அதிகரித்து வருவதாக இறப்புகளும் இப்போது கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் உலகம் முழுவதும் காற்று மாசுபடுதலை தவிர்க்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கும்படி கூறப்பட்டிருக்கிறது. அப்போதுதான் காற்று மாசுபாட்டினால் ஏற்படும் பல விளைவுகளையும் இறப்புகளையும் தடுக்க முடியும்.
இந்த ஆண்டு கூட இந்தியாவின் வட மாநிலங்களில் காற்றின் தரம் குறைந்தது. டெல்லியில் கடந்த பல ஆண்டுகளாக மாசு காற்று வீசி மக்களை அச்சுருத்தி வருகிறது. அங்கு சுத்தமான காற்றை சுவாசிப்பது என்பதே மிகவும் கடினமாக உள்ளது. ஆண்டுக்கு ஆண்டு காற்றின் தரம் குறைந்துதான் வருகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இதற்கான காரணம் வானிலை மற்றும் பருவகால மாற்றங்கள் என்று சொல்லப்படுகிறது.
இந்த ஆண்டும் மிக மோசமான நிலையில் காற்று மாசு ஏற்பட்டு உள்ளது. டில்லி மற்றும் என்.சி.ஆர். பகுதியில் வசிக்கும் மக்கள் விஷக் காற்றால் சுவாசிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். குறிப்பாக குளிர்காலத்தில் இந்த காற்று மாசுபாடு அதிகரித்து வருகிறது. ஆகையால், காற்றின் தரமானது தொடர்ந்து மோசமான பிரிவில் இருந்து வருவதால், மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். குறிப்பாக ஏராளமானவர்கள் மூச்சுத்திணறலால் பாதிக்கப்படுகின்றனர் என்று கூறப்பட்டது.