காதலர் தினத்தில் கஃபே - புதிய அவதாரம் எடுக்கும் கங்கனா ரணாவத்!

Kangana Ranaut
Kangana Ranaut
Published on

சமீப காலமாக சினிமா பிரபலங்கள் சினிமாவை மட்டும் நம்பி இருக்காமல் தாங்கள் சம்பாதித்த பணத்தை ரியல் எஸ்டேட், நகை வியாபாரம், உணவகம், உடற்பயிற்சி கூடங்கள் என்று பல்வேறு தொழில்களில் முதலீடு செய்து நல்ல வருமானம் பார்த்து வருகிறார்கள்.

அந்த வகையில் நடிகை, தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் அரசியல்வாதி என பன்முகங்களை கொண்ட கங்கனா ரணாவத் தற்போது புதிய அவதாரம் எடுத்துள்ளார். அதாவது இமய மலைப்பகுதியில் அழகை ரசித்தபடி உணவு உண்ணும் வகையில் புதிய ஓட்டல் ஒன்றை கட்டி உள்ளார். 'எனது சிறுவயது கனவு உயிர் பெறுகிறது' என்றும் அவர் கூறியுள்ளார். இந்த ஓட்டலில், 'இமாசலபிரதேசத்தின் பாரம்பரிய உணவு வகைகள் நவீன முறையில் வழங்கப்படும்' என்று அறிவித்து உள்ளார். வாடிக்கையாளர்களுக்கு தனது கையால் உணவு பரிமாறும் வீடியோவையும் பகிர்ந்து உள்ளார்.

இதையும் படியுங்கள்:
பட்ஜெட் ரூ.6 கோடி …வசூலோ ரூ.75 கோடி - ‘கெத்து’ காட்டும் மலையாள படம்!
Kangana Ranaut

பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் கங்கனா ரணாவத் 'தாம் தூம்' படத்தில் நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்தன் மூலம் தமிழ் படஉலகில் அறிமுகமானவர். அதனை தொடர்ந்து தலைவி, சந்திரமுகி 2 உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார். இவர் அடிக்கடி சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசி திரையுலகை அதிர வைப்பது மட்டுமின்றி, அரசியலில் பரபரப்பான கருத்தை கூறி அடிக்கடி நெட்டிசன்களால் கலாய்க்கப்பட்டும் வருகிறார். 2020-ம் ஆண்டில், மணிகர்னிகா பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் தொடங்கி அதன் மூலம் இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் கங்கனா இன்ஸ்டாகிராமில் கஃபேவின் பர்ஸ்ட் லுக் பதிவைப் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், மவுன்டன் ஸ்டோரி தனது குழந்தைப் பருவ நினைவுகளாலும், அவரது தாயார் வீட்டில் சமைத்த உணவின் நறுமணத்தாலும் ஈர்க்கப்பட்டதாக கங்கனா பகிர்ந்துள்ளார். தனது சிறு வயது கனவு தற்போது நினைவானதாக கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்:
புகழ்பெற்ற பழம்பெரும் நடிகை புஷ்பலதா காலமானார்... திரைத்துறையினர் அஞ்சலி
Kangana Ranaut

பாலிவுட் நடிகை மலாக்கா அரோரா சமீபத்தில் தனது கஃபே, ஸ்கார்லெட் ஹவுஸைத் தொடங்கினார். இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் கரண் ஜோஹர், மும்பையின் உள்ள கொலாபாவில் Neuma restaurant என்ற உணவகத்தை வைத்திருக்கிறார். நடிகை ஷில்பா ஷெட்டி குந்த்ரா, மும்பையின் மிகவும் பிரபலமான உணவகங்களில் ஒன்றான பாஸ்டியனை வைத்திருக்கிறார். அதே சமயம் நடிகர் ஹிருத்திக் ரோஷனுக்கு லோயர் பரேலில் ஒரு கஃபே உள்ளது. நடிகர் ஷாருக்கானி மனைவி கௌரி கான் மும்பையில் டோரி என்ற உணவகத்தையும் வைத்திருக்கிறார். இந்த வரிசையில் தற்போது ஹோட்டல் தொழிலில் ஈடுபடும் பாலிவுட் பிரபலங்களின் பட்டியலில் நடிகை கங்கனா ரணாவத்தும் இணைந்துள்ளார்.

நடிகை கங்கனா ரணாவத்தின் இந்த புதிய ஓட்டலை காதலர் தினமான பிப்ரவரி 14-ந்தேதி அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்க உள்ளதாகவும் கூறி உள்ளார்.

இதையும் படியுங்கள்:
'என்னை அறிந்தால்' பட நடிகைக்கு விரைவில் 'டும் டும் டும்'
Kangana Ranaut

கடைசியாக இவர் எமர்ஜென்சி என்ற படத்தில் நடித்திருந்தார். அந்த படம் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்தது. குயின் 2 மற்றும் தனு வெட்ஸ் மனு 3 ஆகியவற்றில் நடிக்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com