உள்நிலை அமைதி மற்றும் உலகளாவிய நல்லிணக்கத்தின் சங்கமமான உலக ஆன்மிக மஹோத்சவத்தை ஹைதராபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய தியான மையமான கன்ஹா சாந்தி வனத்தில் இந்திய கலாச்சார அமைச்சகம் (சிறப்புப் பிரிவு) மற்றும் கன்ஹா ஹார்ட்ஃபுல்னெஸ் கோர் கமிட்டி 2024 மார்ச் 14-17 தேதிகளில் நடத்த திட்டமிட்டள்ளது.
பல்வேறு நம்பிக்கைகளைச் சேர்ந்த தலைவர்கள், சிந்தனையாளர்கள் மற்றும் ஆன்மிக தேடுதலில் இருப்பவர்கள் என அனைத்துப் பிரிவைச் சேர்ந்தவர் களையும் கலந்துரையாடலில் ஈடுபட அழைக்கும் மாநாடு தான் இந்த உலக ஆன்மிக மகோத்சவ். 'உலக அமைதிக்கு உள்நிலை அமைதி' என்பது இதன் கருப்பொருள்.
தியானம் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களின் எளிய மற்றும் ஆழமான நடைமுறைகளை ஊக்குவிப்பதன் மூலம், உலகெங்கிலும் உள்ள மக்களின் வாழ்க்கையில் அமைதி, மகிழ்ச்சி மற்றும் ஞானத்தைக் கொண்டு வரவேண்டும் என்பது கன்ஹா ஆசிரம ஹார்ட்ஃபுல்நெஸ் தலைவர் மதிப்புக்குரிய தாஜி அவர்களின் வலியுறுத்தலாகும்.
கன்ஹா சாந்தி வனத்தின் அமைதியான சூழ்நிலையில், பங்கேற்பாளர்கள் அன்றாட வாழ்க்கையில் ஆன்மிகத்தின் இன்றியமையாத பங்கை ஆராய்வார்கள்.
இந்த உலக ஆன்மிக மகோத்சவ் மாநாட்டில் இந்திய மற்றும் உலக பல்வேறு மத குருக்கள், ஆன்மிகத் தலைவர்கள். பேச்சாளர்கள், சிந்தனையாளர்கள் பங்கேற்கிறார்கள். மேலும் நம் இந்திய ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி அவர்களும் மகோத்சவில் கலந்து கொணடு சிறப்புறை ஆற்றுவார்கள். இந்தியா மற்றும் பல்வேறு உலக நாடுகளிலிருந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஆன்மிகவாதிகள் வருகை தருவார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது.