Mosquito
Mosquito

ஆண்டுக்கு 10 லட்சம் உயிரிழப்புகள்... இந்த உயிரினம் தான் அதிக மக்கள் உயிரிழப்பதற்கு காரணம்..!!

Published on

பிறப்பு என்று ஒன்று இருந்தால் இறப்பு என்ற ஒன்றும் நிச்சயமாக இருக்கும் என்பது இயற்கை நியதி; அந்த வகையில் உலகில் மனிதராக பிறக்கும் ஒவ்வொருவருக்கும் இறப்பு என்பது தவிர்க்க முடியாத ஒன்றுதான். ஆனால் அதுவே ஒரு சிறிய உயிரினத்தால் இறப்பு ஏற்படுவது என்பது துரதிர்ஷ்டவசமானது. அந்த வகையில் ஆண்டுதோறும் உலகம் முழுவதும் இந்த சிறிய உயிரினத்தால் 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் உயிரிழப்பதாக தெரிய வந்துள்ளது.

அதாவது சமீபத்தில் உலகில் ஒவ்வொரு ஆண்டும் மனிதர்களை அதிகம் கொல்லும் உயிரினங்களின் பட்டியல் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. அந்த பட்டியலில் ‘கொசு’ முதலிடத்தில் பிடித்திருப்பது தான் அனைவரையும் அதிர்ச்சியடைச் செய்துள்ளது.

கொசு பார்க்க சிறியதாக இருந்தாலும் அதனால் பரவும் நோய்களையும் அது ஏற்படுத்தக்கூடிய விளைவுகளையும் விரல் விட்டு என்ன முடியாது. அதுவும் அது மனிதர்களுக்கு தான் அதிகளவு பாதிப்பை ஏற்படுத்துகிறது.

நேரடியாக கொசு கடிப்பதினால் யாரும் உயிரிழப்பதில்லை என்றாலும், மலேரியா, டெங்கு, சிக்குன்குனியா, ஜிகா மற்றும் என்செபாலிட்டிஸ் உள்ளிட்ட பல கொடிய நோய்களை ஏற்படுத்துவதுடன் சிலசமயம் மரணத்தையும் ஏற்படுத்துகிறது.

அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் இந்த சிறிய கொசுவால் உலகம் முழுவதும் சுமார் 7 லட்சம் முதல் 10 லட்சம் வரையிலான மக்கள் உயிரிழப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் சராசரியாக மனிதர்களின் ஆயுட்காலம் 70 ஆண்டுகள் என கூறப்படும் பட்சத்தில் சில வாரங்கள் மட்டுமே உயிர் வாழக்கூடிய ஒரு சிறிய உயிரினமான கொசுவால் மனிதர்கள் சராசரி ஆயுட்காலத்திற்கு முன்பாக இறப்பது இதன் மூலம் தெரிந்து கொள்வோம்.

இனியும் காலம் தாழ்த்தாமல் இனிவரும் காலங்களிலாவது கொசு உற்பத்தியை கட்டுப்படுத்தாவிட்டால், விலை மதிப்பில்லாத மனித உயிரிழப்புகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரிக்கும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.

இந்த பட்டியலில் கொசுவுக்கு அடுத்தபடியாக, மனிதர்கள் இடம் பிடித்திருப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது, ஆண்டுக்கு சுமார் 4.75 லட்சம் பேர் மனிதர்களால் மனிதர்கள் கொல்லப்படுவதாக புள்ளி விவரங்களில் தெரியவந்துள்ளது.

அதன் தொடர்ச்சியாக பாம்புகளினால் சுமார் 50,000 முதல் 1,38,000 பேர் வரையிலும், நாய்களால் ஆண்டுக்கு சுமார் 25,000 முதல் 50,000 பேர் கொல்லப்படுகின்றனர்.

இதையும் படியுங்கள்:
ஐஸ்லாந்திற்கு சென்ற கொசு! எங்கேயும் பறக்கவும், பிறக்கவும் தெரியும் என்ற எண்ணமோ?
Mosquito

இந்த பட்டியலில் உயிரினங்களுக்கு இணையாக மனிதர்களும் இடம் பிடித்திருப்பது நாட்டில் பாதுகாப்பில்லாத சூழ்நிலையை காட்டுகிறது. இதன் மூலம் பாம்பு, நாய்களை விட மனிதர்கள் தான் மோசமானவர்கள் என்று தெரிய வந்துள்ளது.

logo
Kalki Online
kalkionline.com