2023ல் இந்தியாவில் அதிக கல்வியறிவு கொண்ட மாநிலம் எது தெரியுமா?

Most educated state in india
Most educated state in indiaImge credit: Scroll.in

இந்தியாவின் கல்வி அறிவி வளர்ச்சி கடந்த 4 வருடங்களாக முன்னேறி வருகிறது. இது சமூக பொருளாதார முன்னேற்றத்தையும் மேலோங்கச் செய்திருக்கிறது. அந்தவகையில் சென்ற ஆண்டு கணக்குப்படி இந்தியாவில் 77.7 சதவீத அளவு கல்வியறிவு விகிதம் வளர்ச்சிப்பெற்றுள்ளது.

ஒரு தனிப்பட்ட நபர் எழுதப் படிக்க தெரிவதோடு மற்ற மொழிகளிலும் அடிப்படை புரிதலைக் கொண்டவர் கல்வியறிவு வளர்ச்சி விகிதத்தில் இடம்பெறுவார். அந்தவகையில் 2011ம் ஆண்டை விட 2023ம் ஆண்டு 5 சதவீதம் கல்வியறிவு கொண்டவர்கள் அதிகரித்துள்ளனர். யுனெஸ்கோவில் ரிப்போர்ட்படி இந்தியா 2060ம் ஆண்டு உலகளாவிய கல்வி அறிவியைப் பெறும்.

இந்தியாவில் ஆண்களின் கல்வியறிவு விகிதம் 84.7 சதவீதம். பெண்களின் கல்வியறிவு விகிதம் 70.3 சதவீதம். நகர்ப்புற இந்தியர்களின் கல்வியறிவு விகிதம் 87.7 ஆகும். கிராமப்புற இந்தியர்களின் கல்வியறிவு விகிதம் 73.5 சதவீதம் ஆகும்.

கல்வியறிவு அதிகம் உள்ள மாநிலமாக கேரளா உள்ளது.

அதேபோல் ஆந்திரா படிப்பறிவு குறைவாக உள்ள மாநிலமாக கருதப்படுகிறது. ராஜஸ்தானில் ஆண்களின் படிப்பறிவு குறைவாக உள்ளது. அதேபோல் பீகாரில் பெண்களின் படிப்பறிவு குறைவாக உள்ளது.

கல்வி நகரங்களின் பட்டியல்!

1. 2023ம் ஆண்டில் பெங்களூர் மற்றும் கர்நாடகா ஆகிய நகரங்கள் கல்வித்துறையில் முன்னேறிய நகரமாகத் திகழ்கின்றன. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ், உயிரியல் அறிவியலுக்கான தேசிய மையம், மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் தேசிய நிறுவனம், ஜவஹர்லால் நேரு அறிவியல் ஆராய்ச்சி மையம் போன்ற அனைத்து கல்வி மையங்களும் அங்கு உள்ளன.

2. இரண்டாம் இடத்தில் புனே உள்ளது. இதனை புனே கிழக்கு அக்ஸ்போர்டு என்றும் அழைப்பார்கள்.

3. மூன்றாவது இடத்தில் ஹைத்ராபாத் உள்ளது. இங்கு ஹைத்ராபாத் சர்வதேச தகவல் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் NALSAR சட்ட பல்கலைக்கழகம் ஆகியவை உள்ளன.

இதையும் படியுங்கள்:
மாதம் ரூ.70 ஆயிரம் லாபம்.. தமிழக அரசின் உதவியால் முதலாளியான பெண்!
Most educated state in india

4. நான்காவது இடத்தில் மும்பை உள்ளது. இது பெரிய தனியார் கல்லூரிகள் மற்றும் பொது கல்லூரிகளின் தாயகமாகும்.

5. ஐந்தாவது இடத்தில் டெல்லி உள்ளது. டெல்லி பல்கலைக்கழகம் உட்பட பல புகழ்பெற்ற மத்திய பல்கலைக்கழகங்கள் இங்கு உள்ளன.

6. ஆறாவது இடத்தில் தமிழ்நாட்டில் உள்ள சென்னை நகரம் ஆகும். இது இந்தியாவின் சிறந்த பொறியியல் மையமாக குறிப்பிடப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com