மோட்டார் சைக்கிள் சுற்றுலா நிறுவனம்: சொந்த தொழிலில் நடிகர் அஜித் குமார்!

மோட்டார் சைக்கிள் சுற்றுலா நிறுவனம்: சொந்த தொழிலில் நடிகர் அஜித் குமார்!

AK Moto Ride எனும் பெயரில் மோட்டார் சைக்கிள் சுற்றுலா நிறுவனத்தின் மூலம் சொந்த தொழிலில் நடிகர் அஜித் குமார் களமிறங்குகிறார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக, பலரும் கவனிக்கும் ஒரு முக்கிய நடிகராக இருக்கிறார் அஜித். கடைசியாக இவரது நடிப்பில் துணிவு திரைப்படம் வெளியாகி இருந்தது. இதையடுத்து ‘விடாமுயற்சி’ படத்தில் நடிக்கவுள்ளார் அஜித். லைகா தயாரிக்கும் இப்படத்தை மகிழ் திருமேனி இயக்குகிறார் இவர் சினிமா மட்டுமல்ல துப்பாக்கி சுடுதல், பைக் மற்றும் கார் சாகசம் போன்றவற்றிலும் தனது ஈடுபாட்டை காட்டி வருகிறார்..

இந்த நிலையில் அஜித் ஏகே மோட்டோ ரைடு (AK Moto Ride) என்ற மோட்டார் சைக்கிள் சுற்றுலா நிறுவனம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் ஹெல்மட் அணிந்து கொண்டு உயர்தர பைக்கை காஷ்மீர், லடாக் போன்ற பகுதிகளுக்கு தனியே சென்று வரும் படங்கள் இணையத்தில் வெளியாகின. சினிமா மட்டுமல்ல சாகசத்திலும் ஆர்வம் கொண்ட அஜித் குமார் AK Moto Ride எனும் பெயரில் மோட்டார் சைக்கிள் சுற்றுலா நிறுவனத்தை துவங்கியுள்ளார்.

இது குறித்து நடிகர் அஜித் குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது..

‘வாழ்க்கை ஒரு அழகான பயணம். அதன் எதிர்பாராத தருணங்கள், திருப்பங்கள் மற்றும் திறந்த பாதைகளைக் கொண்டாடுங்கள்’. மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வெளிப்புறங்களில் எனது ஆர்வத்தை ஒரு தொழில்முறை முயற்சியாக மாற்றும் விதத்தில் ஏகே மோட்டோ ரைடு (AK Moto Ride)” என்ற மோட்டார் சைக்கிள் சுற்றுலா நிறுவனத்தை கொண்டு வந்திருக்கிறேன் என்பதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்தியாவின் இயற்கை எழில் கொஞ்சும் நிலப்பரப்புகளில் மட்டுமின்றி, அழகான சர்வதேச சாலைகளிலும் பயணம் மேற்கொள்ள ஆர்வமுள்ள ரைடர்ஸ், சாகச ஆர்வலர்கள் மற்றும் பயண விரும்பிகளுக்கு ஏகே மோட்டோ ரைடு சுற்றுப்பயணங்களை வழங்கும்.

பாதுகாப்பு மற்றும் சௌகரியத்தில் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் சுற்றுப்பயணங்கள் முழுவதிலும் நம்பகத்தன்மை மற்றும் செயல்திறனை உறுதி செய்து, உன்னிப்பாக பராமரிக்கப்படும் சாகச சுற்றுலா சூப்பர் பைக்குகளை “ஏகே மோட்டோ ரைடு” வழங்கும்.

தொழில்முறை வழிகாட்டிகள், மோட்டார் சைக்கிள் சுற்றுப்பயணங்களின் நுணுக்கங்களை நன்கு அறிந்தவர்கள் மற்றும் உள்ளூர் பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகள் பற்றிய விரிவான அறிவைக் கொண்டவர்கள் தொடக்கம் முதல் இறுதி வரை ரைடர்களுக்கு தடையற்ற மற்றும் அதிவேக அனுபவத்தை வழங்குவார்கள்.” என நடிகர் அஜித் குமார் தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com