வீட்டில் கேப்டன் யார்? தோனி சொன்ன ’நச்’ பதில்

M S Dhoni
M S Dhoni

ந்திய கிரிக்கெட் வீரர் தோனியின் லவ் அறிவுரை வழங்கும் வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

மகேந்திர சிங் தோனிக்கு திருமணமாவதற்கு முன்னர் யாருடன் காதலில் இருந்தார் என்று நிறைய போலியான செய்திகள் பரவியது. அதையடுத்து 2010ம் ஆண்டு சாக்ஷியை காதலித்து திருமணம் செய்யபோவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தது. அவரது வாழ்க்கை படமாக எடுக்கப்பட்டதிலிருந்து சாக்ஷி தோனி காதல் கதை அனைவராலும் ஈர்க்கப்பட்டது.

மகேந்திர சிங் தோனி என்றாலே அவரின் கேப்டன்சிதான் ரசிகர்கள் மத்தியில் வெகுவாக பேசப்படும். சிறந்த கேப்டனுக்கு உதாரணம் என்றால் தோனியைதான் சொல்வார்கள். இந்நிலையில், சமீபத்தில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, வாழ்க்கை குறித்த சில விஷயங்களை பகிர்ந்துக்கொண்டார். அப்போது பேசிய அவர், ”எந்த ஃபீல்டிற்கு வேண்டுமானாலும் கேப்டன், துணை கேப்டனாக இருக்கலாம். ஆனால் மனைவியை பொருத்தவரை அது ஒரு சாதாரண ஆள்தான். வீட்டில் சண்டை ஏற்படுத்தி நமக்கு சமாளிக்கும் திறனை வளர்த்து விடுகிறார்கள். ஜோக் ஒருபக்கம் இருந்தாலும் மறுபக்கம் வீட்டின் பெண்கள் தான் நம் குடும்பத்தின் தூன்கள்.

உதாரணத்திற்கு என் அம்மாவை எடுத்துக்கொள்ளுங்கள். நான் ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்தில் இருந்து வந்தவன். என் அப்பா சம்பாரித்து மட்டுமே கொடுப்பார் ஆனால் அம்மாத்தான் எப்படி அதை வைத்து குடும்பத்தை நடத்துவது என அனைத்தையும் பார்த்துக்கொள்வார்” என்றார்.

மேலும் இளைஞர்களுக்கு அவர் லவ் அறிவுரையும் வழங்கினார். ” யாருடன் இருக்கும்போது நீங்கள் சந்தோஷமாக உணருகிறீர்களோ அவர்களை உங்கள் துணையாக தேர்ந்தெடுங்கள்” என்று கூறினார். இறுதியாக,” உங்கள் காதலி வித்தியாசமானவள் என்று மட்டும் எண்ணிவிடாதீர்கள்” என்று சொன்னதும் அரங்கம் எங்கும் ஒரே சிரிப்பொலி எதிரொலித்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com