ஆந்திராவுக்குப் போக ஆசைப்படும் எம்பி கனிமொழி: ஏன் தெரியுமா?

ஆந்திராவுக்குப் போக ஆசைப்படும் எம்பி கனிமொழி: ஏன் தெரியுமா?

ந்திராவைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஐ ஏ எஸ் அதிகாரி விஜய் குமார் தல்லம். இவர், தற்போது ஆந்திரப் பிரதேச அரசின் விவசாய ஆலோசகராக இருக்கிறார். 40 ஆண்டுகால அவரது நீண்ட வாழ்க்கையில், பழங்குடியினர், கிராமப்புறங்கள் மற்றும் விவசாயம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் அவர் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. இவருக்கு, சென்னை கிழக்கு ரோட்டரி சங்கம், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் விருது வழங்கி கௌரவித்துள்ளது. இதற்கான விழா அண்மையில் சென்னையில் நடைபெற்றது.

எம் எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் டாக்டர் சௌம்யா சுவாமிநாதன் சிறப்பு விருந்தினராகவும், பாராளுமன்ற உறுப்பினர் திருமதி. கனிமொழி அவர்கள் தலைமை விருந்தினராகவும் கலந்துகொண்டு இந்த ஆண்டு விருதுபெற்ற ஆந்திரப் பிரதேசத்தின் ஓய்வு பெற்ற ஐ ஏ எஸ் அதிகாரியான திரு. விஜய் குமார் தல்லம் அவர்களுக்கு விருதினை வழங்கினார்கள்.

தனது ஏற்புரையில் திரு. விஜயகுமார் “டாக்டர் எம் எஸ் சுவாமினாதனை தனது ஹீரோ என்று குறிப்பிட்டு, விவசாயத் துறையில் அவர் ஆற்றிய அரும்பணிகளை நினைவு கூர்ந்தார். கடந்த நாற்பது ஆண்டுகளில் ஆந்திராவின் விவசாயிகள், பெண்கள், பழங்குடி இனத்தவர்களுடன் இணைந்து விவசாயத் துறையில் தான் ஆற்றிய பணிகளை எடுத்துக் கூறினார்.

ஆந்திராவில் இவரது ஆலோசனையின்படி கடைபிடிக்கப்படும் புதுமையான, எளிமையான விவசாய முறை பற்றி விஜயகுமார் விளக்கிக் கூறினார். “ஜீரோ பட்ஜெட் நேச்சுரல் ஃபார்மிங் என அழைக்கப்படும் இயற்கை உரங்கள் மற்றும் பூச்சிக் கொல்லிமருந்துகள் கூடப் பயன்படுத்தாத விவசாய முறையை தற்போது ஆந்திரா விவசாயிகளில் 14% பேர் கடைபிடிப்படுகிறது. இந்த முறையில் செய்யபப்டும் விவசாயத்தில் பாசன வசதி அற்ற நிலங்களில் கூட விவசாயிகள் மூன்று போகம் விவசாயம் செய்து லாபம் சம்பாதிக்கிறார்கள். 2026ஆம் ஆண்டுக்குள் ஆந்திராவில் 60 லட்சம் விவசாயிகளும், 12,300 கிராமப் பஞ்சாயத்துக்களும் 80 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் இந்த இயற்கை விவசாயத்தில் ஈடுபடுவார்கள் என்று குறிப்பிட்டார்.

டாக்டர் சௌம்யா சுவாமிநாதன், விருது வெற்ற திரு. விஜயகுமாருக்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துவிட்டு, பருவநிலை மாறுபாடு, கோவிடுக்குப் பிந்தைய உடல்நல பாதிப்புகள் உள்ளிட்ட இன்று உலகம் சந்திக்கும் பல்வேறு வகையான சவால்களை விளக்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய திருமதி. கனிமொழி, ஆந்திர மாநிலத்தின் விவசாய முன்னேற்றத்தில் திரு.விஜயகுமாரின் பங்களிப்பினை பாராட்டியதுடன், ஆந்திராவுக்கு நேரில் சென்று அங்கே நடைபெறும் பூஜ்ஜியம் பட்ஜெட் இயற்கை விவசாயத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள மிகவும் ஆர்வமாக இருப்பதாகக் கூறினார். மேலும் அவர், “பருவநிலை மாறுபாடுகளால் ஏழை மக்கள்தான் மிகவும் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். ரசாயனப் பொருட்களால் மனிதர்களின் உணவில் ஏற்படும் பாதிப்புகள் கடுமையாக உள்ளன” என்று கவலை தெரிவித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com