

இஸ்லாமியர்களின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான மொஹரம் பண்டிகை தியாகத்தை போற்றும் திருநாளாக கருதப்படுகிறது.இஸ்லாமியர்களின் துயத்தை வெளிப்படுத்தும் நாளாக ஆண்டுதோறும் மொஹ்ரம் அல்லது முஹ்ரம் அல்லது முஃகர்ரம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
கர்பாலா போரில் முகம்மது நபிகளின் பேரனானே ஹூசைன் இப்னு அலி, சன்னி இஸ்லாமிய பிரிவினரால் பாலைவனத்தில் தனியாக உணவு, தண்ணீர் இல்லாமல் விடப்படான். பிறகு எதிரிகளால் ஹூசைன் கொப்பட்டார். அவர் கொல்லப்பட்டதை நினைவு கூர்ந்து, துக்கம் அனுஷ்டிக்கும் விதமாக ஆண்டுதோறும் உலகம் முழுவதிலும் உள்ள இஸ்லாமியர்களால் மொஹ்ரம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இஸ்லாமியர்களின் புனித மாதங்களில் ஒன்றான மொஹ்ரம் மாதத்தில் போர், சண்டை ஆகியவை தவிர்க்கப்பட வேண்டும் என்பது மிக முக்கியமாக இஸ்லாமியர்கள் கடைபிடிக்கும் விதியாகும். மொஹ்ரம் மாதத்தின் ஒன்பது மற்றும் பத்தாவது நாளில் நோன்பு கடைபிடித்து, சிறப்பு தொழுகை நடத்த வேண்டும் என்பதும் இஸ்லாமியர்கள் கடைபிடிக்கும் முக்கிய விதிமுறையாகும். இந்த நாட்களில் தங்களின் பாவங்களில் இருந்து விடுபட இறைவனிடம் இஸ்லாமியர்கள் வேண்டிக் கொள்கிறார்கள்.
ரம்ஜான் மாதத்தை போல் மொஹ்ரம் மாதமும் பிறை தெரிவதன் அடிப்படையிலேயே கொண்டாடப்படுகிறது. புத்தாண்டின் முதல் மாதமான இந்த மாதத்தை அஷூரா என்றும் இஸ்லாமியர்கள் குறிப்பிடுகிறார்கள்.இந்த ஆண்டு மொஹரம் பண்டிகை ஜூன் 26ஆம் தேதி வெள்ளிக்கிழமை அரசு விடுமுறை என்பதால், தொடர்ச்சியாக 3 நாள்கள் விடுமுறை கிடைக்கும் என்று மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மொஹரம் பண்டிகை, வார இறுதிநாள்கள், முகூர்த்த நாள்களையொட்டி, சென்னையிலிருந்து 1,432 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.
இந்நிலையில், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “25ஆம் தேதி (வியாழக்கிழமை), 26ஆம் தேதி (மொஹரம் பண்டிகை வெள்ளிக்கிழமை), 27ஆம் தேதி (சனிக்கிழமை) மற்றும் 28ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தொடர் விடுமுறையை முன்னிட்டு 25 முதல் 27ஆம் தேதி வரை சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 25ஆம் தேதி வியாழக்கிழமை அன்று 525 பேருந்துகளும், 26ஆம் தேதி வெள்ளிக்கிழமை மற்றும் 27ஆம் தேதி சனிக்கிழமை 315 பேருந்துகளும் இயக்கப்படும்.
சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 25ஆம் தேதி அன்று 85 பேருந்துகளும், 26 மற்றும் 27 ஆகிய நாட்களில் 75 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மாதவரத்திலிருந்து 25ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை தலா 14 பேருந்துகளும் மற்றும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் 28ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று 615 சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வார இறுதியில் வியாழக்கிழமை அன்று 12,445 பயணிகளும் வெள்ளிக்கிழமை அன்று 5,846 பயணிகளும் சனிக்கிழமை அன்று 3,815 பயணிகளும் மற்றும் ஞாயிற்றுக்கிழமை அன்று 12,642 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர்.
இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் TNSTC Official Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.