#JUST IN: செம சான்ஸ்.. ரூ.5,000 சரிந்தது தங்கம், வெள்ளி விலை..!

Gold and Silver Rates
Gold and Silver
Updated on

சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள் காரணமாக இனி வரும் காலங்களில் தங்கத்தின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் கடந்த வாரத்தில் மட்டும் ஒட்டுமொத்தமாக தங்கத்தின் விலை ரூ.2,080 வரை குறைந்தது.

தங்கத்தின் ஏற்ற இறக்கம் காரணமாக ஆபரண நகையாக வாங்கும் சாமானிய மக்கள், அதில் முதலீடு செய்ய முயற்சிக்க வேண்டும் என பொருளாதார வல்லுநர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர். நேற்று (ஜூன் 22) திங்கட்கிழமை, தங்கம் மற்றும் வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் விற்பனையானது.

இதன்படி நேற்று 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,08,800-க்கும், ஒரு கிராம் ரூ.13,600-க்கும் விற்பனையானது. 1 கிலோ வெள்ளியின் விலை ரூ.2,55,000-க்கு விற்பனையானது.

நகைப் பிரியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், இன்று (ஜூன் 23) தங்கத்தின் விலை அதிரடியாக சரிந்துள்ளது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.320 குறைந்து, ரூ.1,08,480-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.40 குறைந்து ரூ.13,560-க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.5 குறைந்து, ரூ.250-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.5,000 குறைந்து ரூ.2,50,000-க்கு விற்பனையாகிறது.

கடந்த ஆண்டு இதே ஜூன் 23-ல் 1 சவரன் தங்கம் ரூ.73,840-க்கு விற்பனையானது. இன்றைய விலையோடு ஒப்பிட்டால், இடையில் இருக்கும் வித்தியாசமானது கடந்த ஆண்டு விறபனையான தங்கத்தில் கிட்டத்தட்ட 50% விலை உயர்ந்துள்ளது.

அதேபோல் 2025 ஜூன் 23 அன்று 1 கிராம் வெள்ளி ரூ.120-க்கு விற்பனையானது. இன்றைய விலையோடு ஒப்பிட்டால் இடையில் இருக்கும் வித்தியாசமானது, கடந்த ஆண்டு விறபனையான வெள்ளியின் விலையை விட அதிகம்.

gold price
gold price
இதையும் படியுங்கள்:
வேலை மாறினாலும் இனி கவலை வேண்டாம்! ஊழியர்களுக்கு சூப்பரான பென்ஷன் அப்டேட்!
Gold and Silver Rates

கடந்த 5 நாட்களில் தங்கத்தின் விற்பனை விலை நிலவரம்:

ஜூன் 22: 1 கிராம் - ரூ.13,600 1 சவரன் ரூ.1,08,800

ஜூன் 21: 1 கிராம் - ரூ.13,600 1 சவரன் ரூ.1,08,800

ஜூன் 20: 1 கிராம் - ரூ.13,600 1 சவரன் ரூ.1,08,800

ஜூன் 19: 1 கிராம் - ரூ.13,570 1 சவரன் ரூ.1,08,560

ஜூன் 18: 1 கிராம் - ரூ.14,060 1 சவரன் ரூ.1,12,480

கடந்த 5 நாட்களில் வெள்ளியின் விற்பனை விலை நிலவரம்:

ஜூன் 22: 1 கிராம் - ரூ.255

ஜூன் 21: 1 கிராம் - ரூ.255

ஜூன் 20: 1 கிராம் - ரூ.255

ஜூன் 19: 1 கிராம் - ரூ.255

ஜூன் 18: 1 கிராம் - ரூ.270

கடந்த வருடம் தங்கம் மற்றும் வெள்ளியை வாங்கியவர்களுக்கு, தற்போது நல்ல லாபம் கிடைத்துள்ளது. கவலைப்பட வேண்டாம்; இப்போது வாங்கினால் கூட, அடுத்த வருடத்தில் தங்கமும், வெள்ளியும் உங்களுக்கு நல்ல லாபத்தைக் கொடுக்கும்.

தங்கம் விலை உயர்ந்து வருகிறதே என கவலைப்படாமல், அதில் முதலீடு செய்தால் வருங்காலத்தில் நல்ல லாபத்தை ஈட்ட முடியும் என்பதே நிதர்சனம். அதறகேற்ப பொருளாதார நிபுணர்களும் தங்கம் மற்றும் வெள்ளி முதலீட்டை ஊக்குவித்து வருகின்றனர்.

குறுகிய காலத்தில் அதிக இலாபம் கொடுக்கும் மியூச்சுவல் ஃபண்டுகளுக்கு நிகராக, தங்கம் மற்றும் வெள்ளி முதலீடும் இலாபம் கொடுக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
சிங்கப்பெண் படையினரை எளிதாக தொடர்பு கொள்வது எப்படி? உதவி எண் இதோ.!
Gold and Silver Rates
logo
Kalki Online
kalkionline.com