மும்பையின் சூப்பர் ஷெஃப்: 30 நிமிட வேலைக்கு ரூ.18,000 சம்பளம்!

Mumbai chef Salary
மும்பை செஃப்
Published on

மும்பையைத் தளமாகக் கொண்ட ஒரு வழக்கறிஞரின் பதிவு, இந்தியாவின் பெருநகரங்களில் சமையல்காரர்களின் சம்பளம் பற்றிய உற்சாகமான விவாதத்தைத் தொடங்கியுள்ளது!

வழக்கறிஞர் ஆசுதோஷி தனது ட்விட்டர் (X) பதிவில், தனது பகுதி நேர சமையல்காரர் (மகாராஜ்) ஒரு வீட்டிற்கு 30 நிமிடங்கள் பணி செய்வதற்கு ரூ.18,000 சம்பளம் வசூலிப்பதாகக் குறிப்பிட்டார்.

இந்த சமையல்காரர் தினமும் 10-12 வீடுகளில் பணியாற்றுவதாகவும், அங்கங்கே இலவச காலை உணவு மற்றும் தேநீரைப் பெறுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

“சமயத்தில் பணம் கிடைக்காவிட்டால், விடைபெறாமல் வெளியேறிவிடுவார்,” என்று தோஷி தனது சமையல்காரர் (மகாராஜ்) பற்றிக் கூறினார். “இதற்கிடையே, இங்க நான் சம்பளம் பத்தாம திண்டாடிக்கிட்டு இருக்கேன்...இந்தச் சிரமங்களுக்கு மத்தியில், தனக்குச் சேர வேண்டியதைக்கூட பயந்தபடி, மிகவும் பணிவாகக் கேட்க வேண்டியிருக்கிறது" என்று அவர் சிரிப்பை தூண்டும் வகையில் பதிவினைச் சேர்த்தார்.

இந்தப் பதிவு X-இல் கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பயனர், “பகுதி நேர சமையல்காரருக்கு ரூ.18,000 அதிகமானது. குருகிராமில் இது ரூ.4,000-6,000 மட்டுமே,” என்று கூறினார்.

 பலர் 30 நிமிடங்களில் சமைப்பது எப்படி சாத்தியம் என வியந்தனர். 

“மும்பையில் ரூ.18,000 கூட சம்பாதிக்கலாம், ஆனால் 30 நிமிடங்களிலா? பரோட்டா மற்றும் சப்ஜியை தயாரிப்பதற்கு குறைந்தது 45 நிமிடங்கள் ஆகுமே?!” என்று ஒருவர் கேள்வி எழுப்பினார்.

குருகிராமில் ஒரு பயனர், “நான் குருகிராமில் வசிக்கிறேன், சமையல்காரருக்கு ரூ.6,000-12,000 செலுத்தியுள்ளேன். 

ஒரு நபருக்கு ரூ.2,500 வீதம் குடும்பத்திற்கு தினமும் இருமுறை, ஒரு மணி நேரம் பணியாற்றி, 4-5 வீடுகளில் சமைத்து, மாதம் ரூ.30,000-60,000 சம்பாதிக்கிறார்கள்,” என்று ஒப்பீடு செய்தார். 

மற்றொருவர், “ரூ.18,000 கொடுக்கும் தோஷி அவரை மிகவும் நம்பி இருக்கிறார் அல்லது அந்த சமையல்காரர், டயட்டீஷியன், நியூட்ரிஷனிஸ்ட் மற்றும் பாரி ஆலன் கலவையாக இருக்க வேண்டும்!” என்று கிண்டலடித்தார்.

30 நிமிடங்களில் முழு உணவை சமைத்தால், மகாராஜ் அல்ல, அவரை ஒரு அடுக்களை மந்திரவாதி என்று தான் அழைக்க வேண்டும்! ஒரு நாளைக்கு 12 வீடுகளை எப்படி முடிக்கிறார் என்பதை அறிய விரும்புகிறேன்,” 

என்று ஒருவர் ஆச்சரியம் தெரிவித்தார். சிலர் இதை “கிளிக்பெயிட்” என்று கூறி, “30 நிமிடங்களில் உணவு சமைப்பது சாத்தியமில்லை,” என்று சந்தேகம் தெரிவித்தனர்.

வழக்கறிஞரின் பதில்

பின்னர் தோஷி, தனது பதிவு “பார்வையாளர்களைக் கவருவதற்காக இல்லை".

மும்பை போன்ற மிகவும் பரபரப்பான நகரத்தில் வாழும் அனுபவம் என்று விளக்கினார். “நல்ல மகாராஜ்கள் நல்ல பகுதிகளில் இவ்வளவு சம்பளம் வசூலிக்கிறார்கள். 

இந்தப் பதிவு மும்பையின் உயர் தர வாழ்க்கைச் செலவு மற்றும் சமையல் போன்ற சேவைகளுக்கான கட்டணங்களைப் பற்றிய விவாதத்தைத் தூண்டியுள்ளது. 

12 பேர் குடும்பத்திற்கு ஒரு நாளைக்கு ரூ.2,500 வசூலிப்பது அதிகமல்ல, இங்கே இதுவே சாதாரணம்,” என்று அவர் கூறினார்.

நீண்ட பணி நேரம், பரபரப்பான வாழ்க்கை முறை, ஆரோக்கியமான உணவு மீதான கவனம் ஆகியவை சமையல்காரர்கள் மற்றும் பிற தொழிலாளர்களின் தேவையை அதிகரித்துள்ளன.

இதையும் படியுங்கள்:
கொரியன் டோபு ஜோரிம் இவ்ளோ ருசியா? சைவத்துல இம்புட்டு புரதமா? நம்பவே முடியல!
Mumbai chef Salary

இதனால் பல பகுதிகளில் கட்டணங்கள் உயர்ந்துள்ளன. இந்த விவாதம் நம்மை நகர வாழ்க்கையின் உண்மை முகத்தை சிந்திக்க வைக்கிறது—
அது சரி..... மும்பை என்றாலே எப்போதும் சர்ப்ரைஸ் தானே !

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com