பூமிக்கு அடியில் இருந்து கிளம்பிய ராட்சத குழாய்! 13மீ உயரம்.. 56 டன் எடை.. அலறியடித்து ஓடிய மக்கள்..!

Giant Underground Pipe
Giant Underground Pipesource:ndtv
Published on

சலனமற்ற ஒரு சாலையில் திடீரென ஒரு 13 மீட்டர் உயரமும் ,56 டன் எடையும் கொண்ட ஒரு இரும்பு குழாய் எழுந்து நின்றால் எப்படி இருக்கும்.? அப்படியொரு சம்பவம் ஜப்பான் நாட்டின் பிசியான ஒசாகா (Osaka)நகரில் நடந்தது.இதனை பார்த்து மக்கள் அலறியடித்து ஓடினர்.

ஒசாகாவில் உள்ள ஒரு கழிவுநீர் கட்டுமான இடத்தில் புதைக்கப்பட்ட ஒரு குழாய் 2026 மார்ச் 11 ம் புதன்கிழமை அதிகாலை திடீரென தரையில் இருந்து சுமார் 13 மீட்டர் உயரத்திற்கு செங்குத்தாக உயர்ந்து, ஒரு உயர்ந்த சாலையைத் தொடும் அளவுக்கு உயர்ந்து நின்றது .

குழாயின் திடீர் எழுச்சி ஹான்க்யு ஒசாகா-உமேடா (Osaka - Umeda Station)நிலையத்திற்கு அருகிலுள்ள ஒரு பெரிய உயரமான சாலையின் அடியில் கான்கிரீட் குப்பைகளை சிதறடித்தது, இருப்பினும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று நகர அதிகாரிகள் தெரிவித்தனர். காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

புதன்கிழமை காலை 6:50 மணியளவில், நகரின் கிட்டா வார்டின் சுருனோச்சோ பகுதியில் கட்டுமானப் பணிகளைச் சுற்றி கான்கிரீட் குப்பைகள் சிதறிக் கிடப்பதாக போலீசாருக்கு அவசர அழைப்பு வந்தது. நகர கட்டுமானப் பணியகத்தின் கூற்றுப்படி, கட்டுமானப் பணிகளுக்காக நிறுவப்பட்ட எஃகு குழாய் திடீரென தரையில் இருந்து மேலே உயர்ந்தது எப்படி என்பது தான்.

கட்டுமான தளம் ஷின் - மிடோசுஜி நெடுஞ்சாலையின் (தேசிய பாதை 423 ன் Shin- Midosuji high way)ஒரு உயர்த்தப்பட்ட பகுதிக்கு அடியில் அமைந்துள்ளது. உயர்த்தப்பட்ட சாலையின் கீழே உள்ள சாலையில் கான்கிரீட் துண்டுகள் சிதறிக்கிடந்தன, இதனால் ஒசாகா மாகாண காவல்துறை தேசிய பாதையின் சில பகுதிகள் உட்பட அருகிலுள்ள சாலைகளை மூடியது.

சுமார் 27 மீட்டர் நீளமும் 3.5 மீட்டர் விட்டமும் கொண்ட இந்தக் குழாய், கனமழையின் போது அதிகப்படியான மழைநீரைத் தேக்கி வைக்க வடிவமைக்கப்பட்ட ஒரு சேமிப்புக் குழாய் மூலம் ஏற்கனவே உள்ள கழிவுநீர் பாதையை இணைக்கும் பணியின் ஒரு பகுதியாக புதைக்கப்பட்டது. தோண்டப்பட்ட மண் இடிந்து விழுவதைத் தடுக்க, இந்தக் குழாய் ஒரு தடுப்பு அமைப்பாகப் பயன்படுத்தப்பட்டது.மண்ணைத் தக்கவைப்பதற்காகப் பயன்படுத்தப்படும் 'ஸ்டீல் கேசிங்' (Steel casing) எனப்படும் அந்த 27 மீட்டர் நீளமுள்ள இரும்பு குழாய் தான், ஓசாகாவில் தற்போது 13மீ உயரம் எழுந்து பீதியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கான காரணத்தை விசாரித்து வருவதாக நகர அதிகாரிகள் தெரிவித்தனர். ஏன் இப்படி நடந்தது? என்று மண்டையை பீய்த்துக் கொண்டவர்களுக்கு ஒரு' க்குளூ 'கிடைத்துள்ளது.அதாவது , சாக்கடை நீரையும்,மழை நீரையும் இணைக்கும் குழாய்கள் பல வருடங்களுக்கு முன்னர் பதிந்துள்ளனர். அந்த குறிப்பிட்ட பகுதியில் ஏற்பட்ட நிலத்தடி நீரின் அழுத்தம் காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என்கிறார்கள்.இதை பார்த்து அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் அதன் உள்ளே தண்ணீரை அதிக அழுத்தத்தில் செலுத்திய நிலையில் அதன் உயரம் சுமார் 1.6 மீட்டராகக் குறைந்துள்ளது.அதையும் வெட்டி எடுக்க முடிவு செய்துள்ளனர்.

இதையும் படியுங்கள்:
விஜய்க்கு வந்த அடுத்த சிக்கல்..! – சிபிஐ-க்கு 'விஜய்' எழுதிய கடிதம்; சென்னையில் விசாரணை நடக்குமா?
Giant Underground Pipe

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com