அனைத்துத் தொகுதிகளிலும் டெபாசிட் இழந்த நாம் தமிழர் கட்சி: ஆனாலும் ஒரு சிறு சந்தோஷம்!

சீமான்
Seemanhttps://www.indiagatetv.com

டைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் தமிழகத்தின் 40 தொகுதிகளிலும் டெபாசிட் தொகையை இழந்தது நாம் தமிழர் கட்சி. ஆனாலும், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு இதிலும் ஒரு நல்ல விஷயம் நடந்துள்ளது.

கடந்த தேர்தல்களில் நம் தமிழர் கட்சி விவசாயி சின்னத்தில் போட்டியிட்டது. இப்போது நடந்த மக்களவை தேர்தலில் அக்கட்சிக்கு அந்தச் சின்னத்தை ஒதுக்காமல் போட்டியிட்ட 40 தொகுதிகளிலும் மைக் சின்னத்தை ஒதுக்கியது தேர்தல் ஆணையம். ஆனாலும், போட்டியிட்ட பெரும்பாலான தொகுதிகளில்  நாம் தமிழர் கட்சி குறிப்பிடும்படியான வாக்குகளைப் பெற்று இருப்பது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

குறிப்பாக, தஞ்சாவூரில் போட்டியிட்ட ஹுமாயூன் 1.50 லட்சம் வாக்குகள், சிவகங்கையில் போட்டியிட்ட எழிலரசி 1.63 லட்சம் வாக்குகள் பெற்று அரசியல் கட்சியினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளனர். அது மட்டுமின்றி, திமுக மற்றும் அதிமுகவுக்கு அடுத்தபடியாக நாம் தமிழர் கட்சி இருக்கிறது என்றே சொல்ல வேண்டும். கன்னியாகுமரியில் அதிமுகவை முந்திக்கொண்டு மூன்றாவது இடத்தையும், கள்ளக்குறிச்சியில் பாமகவை பின்னுக்கு தள்ளியும், திருச்சியில் அமமுகவை ஓரங்கட்டியும் நாம் தமிழர் கட்சி அதிக வாக்குகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தின் 6 தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளபோதிலும், தமிழகத்தின் 40 தொகுதிகளிலும் தோல்வியை சந்தித்து டெபாசிட் பணத்தை இழந்துள்ளது. மொத்தத்தில் இக்கட்சி இந்த மக்களவை தேர்தலில் 8.19 சதவிகித வாக்குகளைப் பெற்று இருக்கிறது. இதன் மூலம் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தையும் பெறவிருக்கிறது.

இதையும் படியுங்கள்:
மீண்டும் ‘வெற்றிகரமான தோல்வி’யை சந்தித்த தமிழிசை!
சீமான்

தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தைப் பெற குறைந்தபட்சம் 8 சதவிகித வாக்குகள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது. நடைபெற்று முடிந்த தமிழகத்தின் சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி 6.5 சதவிகித வாக்குகளையே பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை இழந்திருந்த இக்கட்சி, தற்போது தேர்தல் ஆணைய அங்கீகாரத்தை மீண்டும் பெற்று இருக்கிறது.

எந்தக் கூட்டணியும் இல்லாமல் தனியே நின்று தேர்தலை சந்தித்து தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தைப் பெற்றிருப்பது நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சோகத்திலும் ஒரு மின்னல் கீற்று சந்தோஷத்தை அளித்திருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com