Job Fair 2026: நாகை,நெல்லையில் இருக்கீங்களா..? அப்போ 19, 26-ம் தேதியை மிஸ் பண்ணாதீங்க..!

நாகப்பட்டினம், நெல்லையில் வரும் செப்டம்பர் 19, 26-ம்தேதிகளில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
Job Fair
Job FairAI image
கவிதா பக்கிள்

வணக்கம், என் பெயர் கவிதா. நான் பிரபல நாளிதழில் 14 வருடங்களாக Content Writer-ஆக பணிபுரிந்திருக்கிறேன். தற்போது பாரம்பரியமும், கலைத்துவமும் நிறைந்த கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக எனது படைப்புகளை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். செய்திகள், விளையாட்டுச் செய்திகள், சினிமா செய்திகள், கலை, ஆன்மிகம், யோகா போன்ற செய்திகளை பதிவிடுவதன் மூலம் உங்கள் கவனத்தை ஈர்க்க கடினமாக உழைக்கிறேன். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன்.

Updated on

நெல்லையில் வரும் செப்டம்பர் 19-ம்தேதியும், நாகப்பட்டினத்தில் வரும் 26-ம்தேதியிலும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த வேலைவாய்ப்பு முகாம் மூலம் 10,000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்குத் தகுதியான நபர்கள் நேரடியாகத் தேர்வு செய்யப்படவுள்ளனர். வேலை தேடும் இளைஞர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் ஆகியவை இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் செப்டம்பர் 26-ம்தேதி நாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ளது.

மாவட்டத்தில் உள்ள படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்குத் தகுந்த வேலைவாய்ப்பை வழங்கி, அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் உயரிய நோக்கில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள இம்முகாமில், பல்வேறு முன்னணித் தனியார்துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு தேர்வு நடத்தவுள்ளதால் இளைஞர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இப்பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாம் நாகப்பட்டினத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் வரும் செப்டம்பர் 26-ம்தேதி சனிக்கிழமை காலை 9 மணிக்குத் தொடங்கி மதியம் 3 மணி வரை நடைபெற உள்ளள.

10th, 12-ம் வகுப்பு, கலை, அறிவியல் மற்றும் வணிகவியல் பாடப்பிரிவுகளில் பட்டம் பெற்ற பட்டதாரிகள், ஐடிஐ, டிப்ளமோ, பொறியியல், செவிலியர் பயிற்சி முடித்த நர்சிங் பணியாளர்கள் மற்றும் தொழில்முறைத் தையல்கலை பயிற்சி பெற்றவர்கள் எனப் பல்வேறு திறன் சார்ந்த படிப்புகளைப் படித்தவர்களும் இம்முகாமில் கலந்துகொள்ளலாம்.

இம்மாபெரும் முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட முன்னணித் தனியார்துறை நிறுவனங்கள் கலந்துகொள்ளவுள்ளன. இந்த நிறுவனங்கள் மூலம் 10,000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்குத் தகுதியான நபர்கள் நேரடியாகத் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

இம்முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற முகவரிக்கு தங்களின் கல்வித் தகுதி மற்றும் சுயவிவரங்களைக் கணினியிலோ அல்லது தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள QR குறியீடு வழியிலோ முன்னரே பதிவு செய்துகொள்ளலாம்.

வேலைவாய்ப்பு முகாம்
வேலைவாய்ப்பு முகாம்

முகாம் தொடர்பான கூடுதல் விவரங்கள் தேவைப்படுவோர் மற்றும் சந்தேகங்களைத் தெளிவுபடுத்த விரும்புவோர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் 04365-252701 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது 9499055916 என்ற கைபேசி எண்ணிலோ வேலை நேரங்களில் தொடர்புகொண்டு தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

நெல்லை வேலைவாய்ப்பு முகாம்

நெல்லையில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் வரும் 19-ம்தேதி (நாளை மறுநாள்) திருநெல்வேலி வண்ணார்பேட்டை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது.

இதையும் படியுங்கள்:
டிகிரி போதும்... ஆரம்பமே 35,000 சம்பளம்.. இந்தியன் ரெயில்வேயில் 4098 காலிப்பணியிடங்கள்..!!
Job Fair

இதில் 5-ஆம் வகுப்பு முதல் பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்கள், பட்டப்படிப்பு (Degree), டிப்ளமோ (Diploma), மற்றும் ஐடிஐ (ITI) முடித்தவர்கள் கலந்து கொள்ளலாம்.

சுயவிவரம், கல்விச்சான்று, ஆதாா் அட்டை ஆகியவற்றின் நகல்களுடன் முகாம் நடைபெறும் நாளில் நேரில் வர வேண்டும்.

மேலும், www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் வேலை தேடுபவர்களுக்கும் (Job Seekers) மற்றும் வேலைவாய்ப்பு வழங்கும் தனியார் நிறுவனங்களுக்கும் (Employers) தங்களது சுயவிவரங்களை பதிவு செய்ய வேண்டும். மேலும், தகவல்களை ‘நெல்லை எம்ப்ளாய்மென்ட் ஆஃபிஸ்’ (Nellai Employment Office) என்ற ‘டெலிகிராம் சானல்’ மூலம் பெறலாம்.

இதையும் படியுங்கள்:
இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க..! 10,000 வேலைவாய்ப்புகள்! சென்னையில் மாபெரும் ‘Mega Job Fair’..!!
Job Fair

வேலை தேடும் இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு தங்களது கல்வி தகுதிக்கேற்ற வேலைவாய்ப்புகளைப் பெறலாம். முகாமில் பங்கேற்கும் நிறுவனங்கள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான தகவல்களை அறிந்து கொள்ள மாவட்ட நிர்வாகம் சார்பில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

logo
Kalki Online
kalkionline.com