நாம் தமிழர் கட்சியில் தமிழ் படிக்கத் தெரியாதவரா? கிளம்பும் சர்ச்சை!

Seeman
Seeman
பாரதி

Hii… I am Kavi Bharathi. Working as a Content Writer in the name Bharathi. Experiencing in Writing and Social Media Handling. And probably writing in News, Sports News, Cinema News, Art/Culture, Beauty/Fashion. Working hard to grab your attention through my contents. I will try my best to fulfill your expectations.

Updated on

லோக்சபா தேர்தலில் விருதுநகர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடப் போகும் வேட்பாளருக்குத் தமிழ் படிக்கத் தெரியாமல் அலுவலரின் உதவியை நாடியது விவாதத்தை கிளப்பியுள்ளது.

லோக்சபா தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடப் போகும் 40 தொகுதிகளின் போட்டியாளர்களைக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒரே மேடையில் அறிமுகம் செய்து வைத்தார்.

இந்தத் தேர்தலில் சீமான் போட்டியிடாத நிலையில் மொத்தம் தற்போது 20 ஆண்கள் மற்றும் 20 பெண்கள் போட்டியிடப்போகிறார்கள். இதனையடுத்து திருவள்ளுர் தொகுதியில் மு.ஜெகதீஷ் குமார், வடசென்னை தொகுதியில் டாக்டர் அமுதினி, தென் சென்னை தொகுதியில் முனைவர் இரா. கார்த்திகேயன், திருபெரும்புத்தூரில் டாக்டர் வெ.ரவிச்சந்திரன், காஞ்சிபுரம் (தனி) தொகுதியில் வி. சந்தோஷ்குமார்,  அரக்கோணத்தில் பேராசிரியர் அப்சியா நஸ்ரின், வேலூர் தொகுதியில் தி.மகேஷ் ஆனந்த், தருமபுரியில் டாக்டர் கா. அபிநயா, திருவண்ணாமலை தொகுதியில் டாக்டர் ரா. ரமேஷ்பாபு ஆகியோர் போட்டியிடவுள்ளனர்.

அதேபோல் ஆரணி தொகுதியில் டாக்டர் கு.பாக்கியலட்சுமி , விழுப்புரம்  தொகுதியில் மு.களஞ்சியம், கள்ளக்குறிச்சி தொகுதியில் ஆ. ஜெகதீசன், சேலம் தொகுதியில் டாக்டர் க. மனோஜ்குமார், நாமக்கல் தொகுதியில் க.கனிமொழி,  ஈரோடு தொகுதியில் டாக்டர் மு.கார்மேகன், திருப்பூர் தொகுதியில் மா.கி. சீதாலட்சுமி, நீலகிரி(தனி) தொகுதியில் ஆ.ஜெயகுமார், கோயம்புத்தூர் தொகுதியில் ம. கலாமணி ஜெகநாதன், பொள்ளாச்சி தொகுதியில்  டாக்டர் நா.சுரேஷ் குமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

மேலும்:

21. திண்டுக்கல் - டாக்டர் கைலைராஜன் துரைராஜன்

22. கரூர் - டாக்டர் ரெ.கருப்பையா

23. திருச்சி - ஜல்லிக்கட்டு ராஜேஷ்

24. பெரம்பலூர் - இரா. தேன்மொழி

25. கடலூர் - வே.மணிவாசகன்

26. சிதம்பரம் - ரா. ஜான்சி ராணி

 27. மயிலாடுதுறை - பி.காளியம்மாள்

28. நாகப்பட்டினம் - மு.கார்த்திகா

29. தஞ்சாவூர் - ஹூமாயூன் கபீர்

30. சிவகங்கை - வி.எழிலரசி

31. மதுரை - முனைவர் மோ.சத்யாதேவி

32. தேனி - டாக்டர் மதன் ஜெயபால்

33. விருதுநகர் - டாக்டர் சி.கௌசிக்

34. ராமநாதபுரம் - டாக்டர் சந்திர பிரபா ஜெயபால்

35. தூத்துக்குடி - டாக்டர் ரொவினா ரூத் ஜேன்

36. தென்காசி - சி.ச. இசை மதிவாணன்

37. திருநெல்வேலி - பா.சத்யா

38. கன்னியாகுமரி - மரிய ஜெனிபர்

39. கிருஷ்ணகிரி - வித்யா வீரப்பன்

 40. புதுச்சேரி - டாக்டர் ரா.மேனகா

என மொத்தம் 40 பேர் போட்டியிட உள்ளனர்.

இதையும் படியுங்கள்:
தேர்தல் - சில சுவாரஸ்யமான தகவல்கள்… உண்மைகள்!
Seeman

அந்தவகையில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் தொடர்ந்து வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். அப்போது விருதுநகர் தொகுதியின் வேட்பாளரான கௌசிக் தமிழ் படிக்கத் தெரியாமல் தேர்தல் அலுவலரின் உதவியை நாடினார்.

தேர்தல் உறுதிமொழியை தேர்தல் அதிகாரி ஜெயசீலன் படித்துக் காட்ட அவர் அதனைத் தொடர்ந்து கூறினார். இவர் ஓமன் நாட்டில் படித்ததால் தமிழ் படிக்கத் தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் நேற்று அவர் தமிழ் படிக்கத் தெரியாமல் திணறியது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com