ஒவ்வொரு 45 நிமிடத்திற்கும் ஒரு சூரிய அஸ்தமனம்! பூமியின் பேரழகைப் படம்பிடித்த நாசா விண்வெளி வீரர்..!

NASA Astronaut Captures Earth’s Stunning Beauty in Viral Time-Lapse Video
Astronaut Captures Earth’s Stunning Beauty in Viral Time-Lapse VideoSource:theindependent
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

நாசா விண்வெளி வீரர் ஜீனா கார்டுமேன்(Zena Cardman) சர்வதேச விண்வெளி நிலையத்தில்(ISS) இருந்து பூமியின் பிரமிக்க வைக்கும் டைம்-லேப்ஸ்(Time-Lapse) வீடியோவை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ, விண்வெளி நிலையம் விண்வெளியில் ஒரு கார்த்துவீல்(cartwheel) சுழற்சியை மேற்கொள்ளும் பொழுது, 60 மடங்கு வேகத்தில் சூரிய அஸ்தமனம், இடி மின்னல், நட்சத்திரங்கள் மற்றும் துருவ ஒளிகள்(aurora) ஆகியவற்றை ஒரே சீரான சுழற்சியில் படம்பிடித்து காட்டுகிறது.

இந்த டைம்-லேப்ஸ் வீடியோவில் அட்லாண்டிக் முதல் பசிபிக் வரை விண்வெளி நிலையம் செல்லும் பாதை, வளிமண்டல ஒளி, நிலவின் பிரதிபலிப்பு மற்றும் சூரிய உதயம் ஆகியவை அழகாக படம் பிடிக்கப்பட்டுள்ளன.

விண்வெளி நிலையம் பூமியைச் சுற்றி வரும்பொழுது ஒவ்வொரு 45 நிமிடங்களுக்கும் ஒருமுறை சூரிய அஸ்தமனத்தை இந்த வீடியோ மிக அழகாக காட்டுகிறது. இது ஸ்பேஸ் எக்ஸ்(SpaceX) CRS-33 விண்கல நடவடிக்கைகளின் போது எடுக்கப்பட்டது. இப்பொழுது இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி, விண்வெளியில் இருந்து பூமியின் அழகை மிக அழகாக எடுத்துக்காட்டுகிறது.

ஜீனா கார்டுமேன், தான் எடுத்த இந்த வீடியோ தான் விண்வெளியில் பார்த்த மிக அழகான காட்சிகளில் ஒன்று என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜீனா கார்டுமேன் யார்?

நாசாவின் க்ரூ-11 பயணத்தின் தளபதியான ஜீனா கார்டுமேன், நிலையத்தில் 73 மற்றும் 74 பயணங்களின் பொழுது ஆராய்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்கியவர். பயிற்சியின் மூலம் புவியியல் ஆய்வாளராக பணியாற்றிய இவர் நாசாவில் சேருவதற்கு முன்பு குகைகள் மற்றும் ஆழ்கடல்கள் போன்ற தீவிர சூழல்களில் வாழ்க்கையைப் பற்றி ஆய்வு செய்தார். கார்ட்மேன் 2017ல் நாசாவில் சேர்ந்தார். அண்டார்டிகாவின் பனிக்கட்டியைக் கடந்து அவர் மேற்கொண்ட பயணங்கள் விண்வெளிக்கான அவரது திறன்களை மேம்படுத்தின. அங்கு அவர் மனித உடலியல் நுண் ஈர்ப்பு விசையில் மேம்பட்ட பொருட்களின் வளர்ச்சி வரை ஆராய்ச்சிகளை மேற்கொள்கிறார். இது அவருடைய முதல் விண்வெளிப் பயணம், ஏற்கனவே 160 நாட்களுக்கும் மேலாக சுற்றுப்பாதையில் பயணித்துள்ளது.

logo
Kalki Online
kalkionline.com