தாஜ்மஹாலை மூன்று முறை விற்ற இந்தியாவின் மோசமான மோசடிக்காரர்!

Natwarlal
Natwarlal
Published on

வெளிநாட்டுக்காரர்கள் இந்தியாவிற்கு வந்தால், நம்முடைய கலை பொருட்களையும் சாக்லெட்டுகளையும் வாங்குகிறீர்களா என்று கேட்டு வாங்கவைப்போம். ஆனால், ஒருவர் தாஜ்மஹால் வாங்குகிறீர்களா? செங்கோட்டை வாங்குகிறீகளா? என்று கேட்டு அவற்றையும் விற்றிருக்கிறார் என்று சொன்னால் நம்பமுடிகிறதா?

நம்பமுடியாத விஷயங்களை அவ்வப்போது கேள்விப்படும்போது அதனை ஏற்றுக்கொள்ளவே முடியாது. வீடு விற்றுத்தரும் ப்ரோக்கர்கள் வீடுகளை விற்கவே கஷ்டப்படுகிறார்கள். அப்படியிருக்கும்போது ஒருவர் உலக அதிசயத்தையே விற்று பணம் பார்த்திருக்கிறார் பாருங்களேன். அவரின் பெயர் மிதிலேஷ் குமார் ஸ்ரீவட்சவா என்கின்ற நட்வர்லால்.

பீகாரின் சிவான் மாவட்டத்தில் 1912ம் ஆண்டு பிறந்த நட்வர்லால், பள்ளி படிக்கும் காலத்திலேயே தன்னுடன் படிக்கும் மாணவர்களை ஏமாற்றி அவர்களின் பொருட்களை எடுத்து வைத்துக்கொள்வார். அவர்களுக்கு என்ன தெரியாது, என்ன வராது என்பதைத் தெரிந்து கொண்டு அதை வைத்து பந்தயத்திற்கு அழைத்து, பந்தய பொருளாக தனக்கு வேண்டியதை வைத்து நண்பர்களின் ஆசையைத் தூண்டிவிட்டு அந்த போட்டியில் அவர்களைத் தோற்கடித்து தான் நினைத்ததை அடைந்துவிடுவார்.

ஒருமுறை அவர் பள்ளிக்கு செல்லும் வழியில், அவருக்கு தெரிந்த ஒரு செல்வந்தர், டிடியை அவரிடம் கொடுத்து, போகும்போது வங்கியில் கொடுத்துவிட்டு செல்லும்படி கூறியிருக்கிறார். அப்போதுதான் அவரது சிந்தனை வங்கிப் பக்கம் திரும்பியது. பின் அந்த செல்வந்தரின் கையெழுத்தை அப்படியே போட்டு வங்கியிலிருந்து பணம் எடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். பின்னர் ஒருமுறை வசமாக மாட்டிக்கொண்ட இவரை போலீஸார் சிறுவன் என்பதால் எச்சரிக்கை மட்டும் விடுத்து சென்றனர்.

பெரியவனாக வளர்ந்து பல மோசடிகளை செய்து பணம் கொள்ளையடித்து தனது கிராம மக்களுக்கு உதவிகள் செய்து வந்தார் அவர். இதனால், அந்த கிராம மக்கள் அவரைக் காட்டிக்கொடுக்கவும் இல்லை.

இப்படியே போய்க்கொண்டிருந்த நிலையில், இவர் பெரிய பெரிய பணக்காரர்களை ஏமாற்ற எண்ணினார். அதன்படி அவர் ஊரில் பெரிய பணக்காரர்களாகக் கருதப்படும் டாடா, பிர்லா, துருபாய் அம்பானி உள்ளிட்ட பெரிய பெரிய ஆட்களைக்கூட எளிதாக ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது.

இவர் படிப்பிலும் கெட்டிகாரராக இருந்ததால், நன்றாக படித்து ஒரு வழக்கறிஞரானார். ஆகையால், கிரிமினல் மூளையுடன் ஏமாற்றுவதில் கைத்தேர்ந்தவராக இருந்தார். 8 மாநிலங்களில் இவர் பல்வேறு வகையான மோசடிகள் செய்ததாகக் குற்றச்சாட்டுகள், வழக்குகள் இருக்கின்றன. 

அவர் போடாத வேடமே இல்லை. பல வேடங்களில் பல பேரை ஏமாற்றிய இவர், பிறகுதான் ஒரு பெரிய திருட்டை செய்ய எண்ணினார். இந்தியாவின் தாஜ்மஹால், பாராளுமன்ற கட்டிடம், செங்கோட்டை, பாராளுமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் என அனைவரையும் வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு விற்பனை செய்யத்திட்டமிட்டார்.

இதையும் படியுங்கள்:
வீட்டை தனித்துவமாக அலங்கரிக்கலாம் வாங்க..!
Natwarlal

ஒவ்வொன்றிற்கும் இவ்வளவு கோடி என பேரம் பேசி அவர்களிடம் போலியான ஆவணங்களைக் கொடுத்து மோசடி செய்து அந்தக் காலத்திலேயே கோடிக் கணக்கில் சம்பாரித்தார். பல முறை போலீஸார்களிடம் பிடிபட்டு தப்பித்தும் இருக்கிறார்.

அப்பவும் அவர் விடவேவில்லை. தாஜ்மஹாலை மட்டும் கிட்டத்தட்ட 3 முறை விற்றிருக்கிறார். இதில் மற்றொரு சுவாரசியம் என்ன தெரியுமா? இறுதியாக தப்பிக்கும்போது அவர் வீல் சேரில் அமர்ந்தப்படியே சிறையிலிருந்து தப்பித்திருக்கிறார்.

சரி… அவர்தான் வெளிநாட்டவர்களை ஏமாற்ற விற்றிருக்கிறார். எப்படி அவர்கள் அதனை நம்பி வாங்கினார்கள்?  

 

 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com