ஆறு ஆண்டுகளுக்கு முன்னரே திருமணம்! " சப்"பென முடிந்த சர்ச்சை!

நயன் விக்கி விளக்கம் !
நயன் விக்கி
நயன் விக்கி
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் பேசுபொருளானது முன்னணி நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவன் இரட்டை குழந்தைகளை பெற்ற விவகாரம் .

நயன் விக்கி திருமணம் கடந்த ஜூன் மாதம் வெகு விமரிசையாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து அவர்களின் ஹனிமூன் உட்பட பல்வேறு புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வந்து பரபரப்பை கிளப்பியது. அதனையடுத்து விக்னேஷ் சிவன் கடந்த வாரம் தனது டிவிட்டர் பக்கத்தில் இரு ஆண்குழந்தைகளுடன் நயன் விக்கி இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து "அம்மா அப்பா" ஆகிவிட்டோம் என பதிவிட்டது சர்ச்சையை கிளப்பி வந்தது.

விக்கி நயன்
விக்கி நயன்

திருமணமான நன்கு மாதத்தில் குழந்தையா? என பலரும் பதிவிட்டு ஆச்சர்யத்தை வெளிப்படுத்தி வந்தனர். மேலும் வாடகை தாயாக இருக்கலாம் என குறிப்பிட்டு சந்தேகத்தை கிளப்பினார்.

மேலும் வாடகை தாய் குறித்து எதிர்ப்பும் , ஆதரவுமாக பல்வேறு சர்ச்சையான பதிவுகள் பட்டையை கிளப்பி வெளிவந்தன. அதன் விதிமுறைகள் குறித்து பக்கம் பக்கமாக பல்வேறு பத்திரிக்கைகள் மற்றும் ஊடகங்களும் எழுதி குவித்தன. .

இந்நிலையில் நயன் மற்றும் விக்கி தங்களது திருமணம் 6 ஆண்டுகளுக்கு முன்பே பதிவு செய்யப்பட்டது என ஒரே போடாக போட்டு ப்ரச்சனையை முடித்து வைத்தனர் நயன் விக்கி தம்பதிகள்.

logo
Kalki Online
kalkionline.com