என்டிஏ உள்ளே! திமுக வெளியே! – கோவை பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி!

NDA IN DMK OUT
Modi speech Kovai
ராஜமருதவேல்

வணக்கம்! நான் வி.ராஜமருதவேல். பொறியியல் படித்து சில வெளிநாடுகளில் பணிபுரிந்துள்ளேன். தற்போது வங்கி மற்றும் காப்பீட்டு துறையில் பணியாற்றுகிறேன். சிறு வயதில் இருந்தே புத்தகத்தின் மீதும் எழுத்தின் மீது தீராத ஈர்ப்பு எனக்குண்டு. சில வருடங்களாக வலைத்தளங்களில் எழுத தொடங்கி, கல்கியில் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பளித்தமைக்கு நன்றி! ஆன்மீகம், ஆரோக்கியம், பயணம், மோட்டிவேஷன், விளையாட்டு, பசுமை/சுற்றுச்சுழல், கலை/கலாச்சாரம், செய்திகள், வெள்ளித்திரை ஆகிய பிரிவுகளில் எழுதி வருகின்றேன். என் எழுத்துக்கள் மற்றவர்களையும் கவரும் என்று நம்புகிறேன். வரலாற்றுக் சிறுகதைகள், வரலாற்றுத் தொடர்கள் எழுத ஆவல்! நன்றி! ஜெய் ஹிந்த்!

Updated on

தேர்தல் பிரச்சாரத்திற்காக கோவை வந்த பிரதமர் மோடி , கொடிசியா வளாகத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக வாக்கு சேகரித்தார்.

பிரதமர் தனது உரையில் "தமிழர்களுக்கு புத்தாண்டு புதிய நம்பிக்கையை கொண்டு வரட்டும். இன்று தன் மக்களின் முன்னால் எனது கோபத்தையும் வேதனையையும் வெளிப்படுத்த விரும்புகிறேன். 2023-ஆம் ஆண்டில், நாம் 'நாரி சக்தி வந்தன் அதினியத்தைக்(மகளிருக்கு அதிகாரம் அளித்தல் மற்றும் மதிப்பு கொடுத்தல்) கொண்டு வந்தோம்.

நாங்கள் சாதாரண குடும்பங்களை சேர்ந்த பெண்கள் அதிக அளவில் எம்பி , எம்எல்ஏக்களாக வர வேண்டும் என்று ஆசைப்பட்டோம். அதற்காக வரலாற்று சிறப்புமிக்க மகளிர் ஒதுக்கீடு மசோதாவை கொண்டு வந்தோம். அதை நிறைவேற்றுவதற்காக நான் எதிர்க்கட்சிகளிடம் மன்றாடி கேட்டுக் கொண்டேன். ஆனாலும் துரதிர்ஷ்டவசமாக இந்த முயற்சியை திமுக , காங்கிரஸ் மற்றும் அவர்களின் கூட்டணி கட்சிகள் தடுத்துவிட்டன. இந்த மசோதாவை அவர்களின் வெறுப்பு அரசியலுக்கும் அற்ப அரசியலுக்கும் ஒரு இலக்காக எடுத்துக் கொண்டனர்.

2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்பட்டிருந்தால் தமிழ்நாட்டிற்கு இன்னும் பல கூடுதல் இடங்கள் கிடைத்திருக்கும். ஆனால், திமுக இதை விரும்பவில்லை. தமிழர்கள் தற்போது மிகவும் தெளிவாக உள்ளனர். இந்திய கூட்டணி உள்ளே! திமுக வெளியே! திமுகவின் மகளிர் ஒதுக்கீட்டிற்கு எதிரான மனநிலைக்கு நல்ல பதில் கிடைக்கும். என்று பிரதமர் மோடி உரையாற்றினார்.

logo
Kalki Online
kalkionline.com