என்டிஏ கூட்டணி வெற்றி பெறும், திமுக நிச்சயம் தோற்கும் – நாகர்கோவில் பேரணியில் பிரதமர் மோடி!

Modi Road Show
Modiji Road showNDA WIN DMK LOSS
ராஜமருதவேல்

வணக்கம்! நான் வி.ராஜமருதவேல். பொறியியல் படித்து சில வெளிநாடுகளில் பணிபுரிந்துள்ளேன். தற்போது வங்கி மற்றும் காப்பீட்டு துறையில் பணியாற்றுகிறேன். சிறு வயதில் இருந்தே புத்தகத்தின் மீதும் எழுத்தின் மீது தீராத ஈர்ப்பு எனக்குண்டு. சில வருடங்களாக வலைத்தளங்களில் எழுத தொடங்கி, கல்கியில் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பளித்தமைக்கு நன்றி! ஆன்மீகம், ஆரோக்கியம், பயணம், மோட்டிவேஷன், விளையாட்டு, பசுமை/சுற்றுச்சுழல், கலை/கலாச்சாரம், செய்திகள், வெள்ளித்திரை ஆகிய பிரிவுகளில் எழுதி வருகின்றேன். என் எழுத்துக்கள் மற்றவர்களையும் கவரும் என்று நம்புகிறேன். வரலாற்றுக் சிறுகதைகள், வரலாற்றுத் தொடர்கள் எழுத ஆவல்! நன்றி! ஜெய் ஹிந்த்!

Updated on

தேர்தல் பிரச்சாரத்திற்காக இன்று (ஏப்ரல்.15) தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி , தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் பாஜக தலைவர்கள் அண்ணாமலை மற்றும் பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோருடன் ரோடு ஷோவை நாகர்கோவிலில் துவக்கினார்.

தேர்தல் பிரச்சாரத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி வாக்கு சேகரித்தார். அவர் கூட்டணி கட்சி வேட்பாளர்களுடன் கலந்துரையாடும் போது தமிழக சட்டமன்ற தேர்தலில் தே.ஜ.கூ நிச்சயமாக வெற்றி பெறும் , திமுக கட்டாயமாக தோற்கும். ஊழல் நிறைந்த தவறான நிர்வாகத்தை கொண்டுள்ள திமுகவை தமிழ்நாடு விரும்பவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. தமிழகத்தில் மக்களை முதன்மையாகக் கொண்ட சிறப்பான ஒரு ஆட்சியை தேசிய ஜனநாயக கூட்டணி வழங்கும் என்று கூறினார்.

தமிழகம் வளர்ச்சி பெற்ற மாநிலமாக இருக்கவும் சிறந்த மாநிலமாக இருக்கவும் தங்களது கூட்டணிக்கு வாக்களிக்குமாறு பிரதமர் கேட்டுக்கொண்டார்.

logo
Kalki Online
kalkionline.com