விஜய் ரசிகரின் "நீ வா தலைவா, இலவச கல்வி தா தலைவா" போஸ்டரால் பரபரப்பு!

விஜய் ரசிகரின் "நீ வா தலைவா, இலவச கல்வி தா தலைவா" போஸ்டரால் பரபரப்பு!

நடிகர் விஜய் அரசியல் வருகை குறித்த வாசகங்களுடன் சுவரொட்டிகளை விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ளதால் கோவையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் நீலாங்கரையில் நடிகர் விஜய் 234 தொகுதி வாரியாக பனிரெண்டாம் வகுப்பு பொது தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கினார். அந்த விழாவில் விஜயும் பல்வேறு கருத்துக்களை மாணவர்களுக்கு அறிவுரையாக வழங்கி இருந்தார். மாணவர்களும் பெற்றோரும் காசு வாங்கி கொண்டு ஓட்டளிக்க வேண்டாம் என தெரிவித்தார். இதில் விஜய்யின் கருத்துகளில் அரசியல் சாயலில் இருந்தாக கருத்துகள் சமூக வலைத்தளங்களில் பரவியது. அரசியல் கட்சியினர் பலரும் இது குறித்து கருத்து தெரிவித்து வந்தனர்.

நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு சமூகவலைத்தளம் மூலமாக அவரது ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வரும் நிலையில், கோவையில் பல்வேறு பகுதிகளில் விஜயின் அரசியல் வருகை குறித்த சுவரொட்டிகளை விஜய் ரசிகர் மன்றத்தினர் ஒட்டியுள்ளனர்.

கோவையில் பல்வேறு பகுதிகளில் “நீ வா தலைவா, இலவச கல்வி தா தலைவா” என்று விஜய்யின் அரசியல் வருகை குறித்த வாசகங்களுடன் சுவரொட்டிகளை விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ளனர்.

இந்த நிலையில் நாளை விஜய் பிறந்த நாள் கொண்டாடப்பட உள்ள நிலையில், கோவை மாவட்ட விஜய் தலைமை மாணவரணி சார்பில் மாநகர் முழுவதும், “நீ வா தலைவா, இலவச கல்வி தா தலைவா” என்ற வாசகங்களுடன் நகரின் பல்வேறு பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது கோவை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com