

திருநெல்வேலி என்று அழைக்கப்படும் நெல்லை நகர் தென் தமிழகத்தில் ஒரு முக்கியமான நகரமாகும். நெல்லையில் தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் ரயிலை தங்கள் அன்றாடப் பயணத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர். இதனால் இது நெரிசல் மிக்க ஒரு ரயில் நிலையமாக மாறிவருகிறது.
அதனால், இந்த ரயில் நிலையத்தை நவீனப்படுத்தும் பணிகள் இப்பொழுது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நவீன நவீனமயமாக்கும் பணியில் நடைமேடைகள் நீட்டிப்பு, தண்டவாளங்களை புதுப்பித்தல், மின் இணைப்புகளை மேம்படுத்துதல், சிக்னல்களை புதுமைப்படுத்துதல் போன்றவை அடங்கும்.
இங்கு உள்ள இரயில் நிலையத்தை மேம்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதன் காரணமாக ரயில்களை நிறுத்துமிடங்கள் நவம்பர் 6 முதல் நவம்பர் 29 வரை மாற்றப்பட்டுள்ளன. நெல்லை ரயில் நிலையத்திற்கு வரும் முக்கிய ரயில்கள் ஐந்தாவது மேடையில் இனிமேல் நிற்கும். இதை தென்னக ரயில்வே அதிகாரிகள் தன்னுடைய அதிகாரப்பூரவ அறிக்கையில் தெரிவித்துள்ளனர்
இந்த பணிகள் தங்கு தடை எதுமின்றி நடைபெறுவதற்காக தென்னக ரயில்வே நிர்வாகம் சில தற்காலிக மாற்றங்களை மேற்கொண்டுள்ளது.
இதன் காரணமாக நவம்பர் 06 முதல் நவம்பர் 29 வரை
சென்னை – நெல்லை வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் (20665 / 20666)
நெல்லை – சென்னை அந்தோத்தியா எக்ஸ்பிரஸ் (20691 / 20692)
நெல்லை – சென்னை இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (16129 / 16130)
பாலையம் – நெல்லை பாசஞ்சர் ரயில்
மதுரை – நெல்லை பாசஞ்சர் ரயில் ஆகிய இரயில்களும், மற்றும் சில புறநகர் குறுகிய தூர ரயில்களின் வருகை மற்றும் புறப்படும் நடைமேடைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
எனவே இந்த அறிவிப்பில் கூறியுள்ள தகவல்களை மனதில் கொண்டு தங்கள் இரயில் பயணத்தை திட்டமிட்டுக் கொள்ளுமாறு தென்னக இரயில்வே நிர்வாகம் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும் மூத்த குடிமக்களும் மாற்றுத்திறனாளிகளும் எளிதாக ரயில் நிலையத்தின் நடை மேடைகளை சென்றடைவதற்காக லிப்ட் வசதியும், எஸ்கலேட்டர் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ரயிலில் பயணிக்கும் பயணிகள் எந்தவித குழப்பமும் இல்லாமல் தங்களது ரயில்களை கண்டுபிடித்து பயணம் மேற்கொள்ள ஆதரவு அளிக்குமாறு ரயில்வே நிர்வாகம் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்த மேம்பாட்டு பணிகள் மூலம் நெல்லை ரயில் நிலையம் ஒரு நவீன ரயில் நிலையமாக மாறும் என்று எதிர்பார்க்கலாம்.இதனால் பயணிகள் வசதி, பாதுகாப்பு ,மற்றும் நேரத்தில் பயணம் போன்றவை உறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான முன்னெடுப்புகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தென்னக இரயில்வே அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.இந்த அறிவிப்பினால் நெல்லை மக்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.