

ஈரானுக்கு எதிரான இஸ்ரேல் மற்றும் அமெரிக்கத் தாக்குதல்களால் பிராந்திய மோதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், டெல்லியில் உள்ள அமெரிக்க, ஈரான் மற்றும் இஸ்ரேல் தூதரகங்களைச் சுற்றிப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.துபாய் பங்குச்சந்தைகள் மூடப்பட்டுள்ளன. இன்றும் நாளையும் துபாய் பங்குச்சந்தைகள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1100 சரிந்து, 80,277ல் வர்த்தகமாகிறது
மத்திய கிழக்கில் பதற்றமான சூழல் நிலவுவதால், ஐக்கிய அமீரகத்தில் வரும் புதன்கிழமை வரை பள்ளி, கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆன்லைன் மூலமே பள்ளி, கல்லூரிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் தொடர்ந்து பதிலடி தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இஸ்ரேல், துபாய், கத்தார் உள்ளிட்ட நாடுகளில் ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.ஈரானை தாக்குதல் காரணமாக இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் நகரில் உட்சபட்ச பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அலுவலகம் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரான் சற்றுமுன் அறிவித்துள்ளது. மேலும், 'நெதன்யாகு உயிரோடு இருக்கிறாரா? இல்லையா? என தெரியவில்லை' என ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அணு ஆயுத ஒப்பந்தத்தில் கையெழுத்திட முரண்டு பிடித்துவரும் ஈரான் மீது, அமெரிக்காவும், இஸ்ரேலும் கைகோர்த்து திடீர் தாக்குதல் நடத்திவருகின்றன. இதில் ஈரானின் உச்ச தலைவர் கமேனி உள்பட பலர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.