விஜய் பிறந்தநாளில் புதிய திட்டம் அறிவிப்பு!

விஜய் பிறந்தநாளில் புதிய திட்டம் அறிவிப்பு!
Updated on

தளபதி விஜய் பிறந்தநாள் இன்று ரசிகர்களாலும், விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளாலும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவச விருந்தகம், ரொட்டி பால் திட்டம் என பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், புதிய திட்டம் ஒன்றையும் அறிவித்துள்ளனர்.

விஜய்யின் 49வது பிறந்தநாள் இன்று ரசிகர்களாலும், விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளாலும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருவதோடு, பல்வேறு இடங்களில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, விஜய் மக்கள் இயக்கம் சார்பில் திநகர் பகுதியில் மக்களுக்கு இலவச உணவு வழங்கப்பட்ட நிலையில், அந்நிகழ்ச்சியில் விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கலந்துகொண்டார்.

அதன்பிறகு, அவர் பேசும்போது, விஜய் ரசிகர்கள் மற்றும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளின் பங்களிப்பின் மூலம், தமிழ்நாடு மற்றும் கேரளா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறோம் என அவர் கூறினார்.

பின்னர், ஒரு புதிய அறிவிப்பையும் அவர் வெளியிட்டார். அதன்படி, தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும், விஜய் மக்கள் இயக்கம் சார்பாக மாணவர்களுக்காக இரவு பாடசாலைகள் விரைவில் தொடங்க இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். விஜய் மக்கள் இயக்கத்தில் உள்ள படித்தவர்கள் இந்த மாலை நேர வகுப்பை நடத்துவார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஏற்கெனவே, இலவச விருந்தகம், ரொட்டி பால் திட்டம் என பல்வேறு நலத்திட்ட உதவிகள் நடைபெற்று வரும் நிலையில், இந்த மாலை நேர பாடசாலையை விஜய் மக்கள் இயக்கத்தினர் தொடங்க உள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.

logo
Kalki Online
kalkionline.com