துபாயில் பார்க்கிங் பிரச்சனையை தீர்க்க ஒரு புதிய ஆப் அறிமுக செய்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
உலகம் முழுவதும் அனைத்து நாடுகளிலும் வாகனம் என்பது இன்றியமையா ஒன்றாக மாறிவருகிறது. வாகனம் இல்லாத வீடுகளை பார்ப்பதே கஷ்டமாகிவிடுகிறது. இதனால், சாலைகள் பெருகி வந்தாலும், ட்ராஃபிக் மட்டும் குறைவதில்லை. குறிப்பாக பணிக்கும் செல்பவர்கள் கட்டாயம் ஒரு பைக்காவது வைத்திருக்கிறார்கள். இதனால், ஒவ்வொரு நிறுவனத்திலும் பார்க்கிங் வசதி போதியதாகவே இல்லை. பலர் ரோடுகளில் நிற்கவைக்கிறார்கள்.
மேலும் சிலர் பார்க்கிங் செய்யவே சீக்கிரம் ஆபிஸ் சென்றுவிடுகிறார்கள்.
இதேபோல், மால் போன்ற இடங்களில் பார்க்கிங் செய்ய பணம் கொடுக்க வேண்டும். உலகமே டிஜிட்டல் பர்வர்த்தனையில் இருக்கும் நேரத்தில், பார்க்கிங் கட்டணம் நேரடியாக கொடுப்பது சற்று கடினமாகி விடுகிறது.
இப்படி பல பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக துபாயில் ஒரு ஆப் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த ஆப்பின் பெயர் பார்க்கின் (Parkin) ஆப். இதில் "முதலில் பார்க்கிங், பிறகு பணம் செலுத்துதல்" போன்ற வசதிகள் உள்ளன. பார்க்கிங் அபராதங்களை எதிர்த்து முறையிடும் வசதியும் இதில் உள்ளது.
அதேபோல், அந்த இடத்தில் பார்க்கிங் செய்ய எங்கே இடம் உள்ளது என்பதையும் காண்பித்து கொடுக்கும். இதுகுறித்து பார்க்கின் தலைமை அதிகாரி முகமது அப்துல்லா அல் அலி பேசுகையில், “இதன்மூலம் பார்க்கிங் செயல்முறையை எளிதாக்கலாம். பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்தலாம். மேலும் நகர்ப்புற வசதி மட்டுமின்றி துபாயின் அனைத்து இடங்களிலும் 2040ம் ஆண்டிற்குள் கொண்டு வந்துவிடலாம்.” என்று பேசினார்.
இதிலிருக்கும் முக்கிய அம்சங்கள்:
1. பார்க்கிங் ஃபைண்டர்: பார்க்கிங் செய்ய எங்கே இடம் இருக்கிறது என்பதை காண்பித்து கொடுக்கும்.
2. முன்கூட்டி திட்டமிடல்: பார்க்கிங்கை முன்கூட்டியே திட்டமிட காலெண்டரில் குறித்துக் கொள்ளலாம்.
3. பே லேட்டர்: இதன்மூலம் பார்க்கிங் செய்துவிட்டு, தாமதமாக கட்டணம் செலுத்திக்கொள்ளலாம்.
இந்த ஆப் விரைவில் உலகம் முழுவதும் வரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.