
கடந்த 2019-ம்ஆண்டு சீனாவின் ஊகான் மாநிலத்தில் பரவிய கொரோனா வைரஸ் அடுத்தடுத்து உலக நாடுகளுக்கும் பரவியது. கொரோன வைரஸ் பரவலால் உலக நாடுகளில் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தது மட்டுமில்லாமல் உலக அளவில் பொருளாதார ரீதியாகவும் சுகாதார ரீதியாகவும் பலத்த தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த வைரஸ் 2 வருடங்களாக உலக மக்களை படாதபாடு படுத்தி விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.
உலகம் முழுவதும் கொரோனா தொற்று காரணமாக 2020 ஜனவரி முதல் 2021 டிசம்பர் வரை கிட்டத்தட்ட ஒரு கோடியே 80 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்திருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்தியாவைப் பொறுத்தவரையில் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை இலட்சத்தை கடந்ததாக கூறப்படுகிறது.
இந்தியாவில் கொரோனாவுக்கு கோவாக்சின், கோவிஷீல்ட் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு தீவிர முயற்சி காரணமாக கொரோனா தொற்றை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்ததுடன், பல வெளிநாடுகளுக்கும் இந்தியா கொரோனா தடுப்பூசியை இலவசமாக ஏற்றுமதி செய்தது. அதனை தொடர்ந்து கொரோனா வைரஸ் உருமாற்றங்களான ஓமிக்ரான் உள்ளிட்ட பல வைரஸ்கள் பரவி வந்தாலும் அதனால் மக்களுக்கு பாதிப்புகள் அதிகம் ஏற்படவில்லை என்று தான் கூறவேண்டும்.
கொரோனா பரவல் முடிந்து 4 ஆண்டுகள் ஆனநிலையில் தற்போது தான் உலக நாடுகளில் அதிலிருந்து மீண்டு வந்த நிலையில் புதிய வகை கொரோனா வைரஸ் ஒன்றை சீனாவை சேர்ந்த விஞ்ஞானிகள் குழு கண்டறிந்திருப்பது உலக நாடுகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வவ்வாலில் இருப்பது இந்த வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாகவும், இந்த வகை வைரசுக்கு HKU5-CoV-2 என பெயரிட்டுள்ளதாகவும் சீன விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். அதுமட்டுமின்றி இந்த வைரஸ் கொரோனாவை போல சுவாச மண்டலத்தை தாக்கி பாதிப்பை ஏற்படுத்தும் தன்மை கொண்டது என்றும் கூறப்படுகிறது. HKU5-CoV-2 என்பது merbecovirus குடும்பத்தின் ஒரு பகுதியான இதில் MERS வைரஸும் அடங்கும். இது முதன்முதலில் ஹாங்காங்கில் வௌவால்களில் கண்டுபிடிக்கப்பட்டது.
கொரோனா பரவ காரணமாக இருந்த வைரஸ் போன்று (ACE2) இந்த வைரஸ் இருப்பதால் நிபுணர்களை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர். இந்த ஆய்வில் வூஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி உள்ளிட்ட உயர்மட்ட ஆராய்ச்சி நிறுவனங்களின் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த புதிய வைரஸ் மனித உயிரணுக்களைப் பாதிக்கக்கூடியது என்றாலும், இது கொரோனாவுடன் ஒப்பிடும்போது, அத்தனை ஆபத்தானதாகத் தெரியவில்லை என்றாலும், பாதிப்பை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். சாத்தியமான ஆபத்து இருந்தாலும் மக்கள் பீதி அடையத் தேவையில்லை என்று ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.