வெளிநாட்டிலிருந்து உயிரிழந்தவரின் உடலை எடுத்துவர புதிய வசதி!

மாதிர படம்
மாதிர படம்
Published on

24 மணி நேரமும், வாரத்தின் ஏழு நாட்களிலும் இயங்கும் , 'இ - கேர்' (e-CARE portal) எனப்படும் புதிய தளத்தை மத்திய சுகாதார அமைச்சகம் துவக்கியுள்ளது.

இந்த இணையதளத்தில் ஒருவர் விண்ணப்பித்தவுடன், விமானநிலைய சுகாதார அமைப்பின் சார்பில் நியமிக்கப்படும் தொடர்பு அதிகாரி அவற்றை கண்காணித்து இறந்தவரின் இறப்பு சான்றிதழ், உடல் பதப்படுத்தப்பட்ட சான்றிதழ், அந்த நாட்டில் உள்ள இந்திய துாதரகத்தில் இருந்து தடையில்லா சான்றிதழ், விண்ணப்ப சான்றிதழ் மற்றும் ரத்து செய்யப்பட்ட பாஸ்போர்ட் ஆகியவற்றை இணைக்க சொல்லி , அவை உடனடியாக பரிசீலிக்கப்பட்டு, விமான நிறுவனங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்படும். 

இதனால் காலதாமதம் இல்லாமல், மிக வேகமாக அனுமதி வழங்கப்பட்டு,  விண்ணப்பம் எந்தக் கட்டத்தில் உள்ளது என்பது தொடர்பான தகவல், இமெயில், எஸ்.எம்.எஸ்., வாட்ஸாப் வாயிலாக தெரிவிக்கப்படும் வசதியை ஏற்படுத்தி உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com