உலகளவில் கோடிக்கணக்கான பயனாளர்களை தன்வசம் வாடஸ்அப் நிறுவனம். வாட்ஸ்அப் சமூக வலைதள செயலி அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு சில மாதங்களிலேயே மக்கள் மத்தியில் பிரபலமாகி விட்டது. வாட்ஸ் அப்பிற்கு போட்டியாக எத்தனையோ செயலிகள் வந்தாலும் இன்றுவரை வாட்ஸ்அப் மட்டும் தனித்து நிற்கிறது. ஆனால் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தியாவின் ‘அரட்டை’ எனும் செயலி வாட்ஸ்அப்பிற்கு போட்டியாக தளத்தில் இறங்கியது.
இந்நிலையில் வாட்ஸ்அப்பில் புதிய அம்சங்களை கொண்டு வர அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. வெகு விரைவில் இந்த புதிய அம்சங்கள் பயன்பாட்டுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப்பில் அவ்வப்போது புதிய அம்சங்களை அந்நிறுவனம் கொண்டு வருகிறது. புதிய வசதிகளை வாடிக்கையாளர்கள் பயன்படுத்த வேண்டுமெனில் ப்ளே ஸ்டோரில் வாட்ஸ்அப்பை அப்டேட் செய்வது அவசியம்.
இந்நிலையில் தற்போது ஆண்ட்ராய்டு பயனாளர்கள் மோஷன் போட்டோஸை (Motion Photos) வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் மற்றும் சாட் செய்யும் போதும் பகிரும் புதிய வசதி வெகு விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதேபோல் ஐஓஎஸ் பயனாளர்கள் லைவ் போட்டோஸை (Live Photos) வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் பகிரும் வசதியும் அறிமுகமாக உள்ளது.
இது தவிர வாட்ஸ்அப்பில் நண்பருடன் பேசும் போது, சாட் செய்யப்படும் செய்தியை மொழிபெயர்ப்பு செய்யும் வசதியும் விரைவில் வர உள்ளது. மேலும் குரூப் சாட்டின் போது ஒருவருடைய மெசேஜுக்கு பதிலளிக்கும் விதமாக வீடியோ நோட்ஸ் (Video Notes) மற்றும் திரெட்டட் ரிப்பிளைஸ் (Threaded replies) உள்ளிட்ட வசதிகள் விரைவில் வரவுள்ளன. வாட்ஸ்அப் அறிமுகம் செய்ய உள்ள இந்த புதிய வசதிகளைப் பெறுவதற்கு செயலியை மறக்காமல் அப்டேட் செய்ய வேண்டும்.
சமீபத்தில் இந்தியாவில் அரட்டை செயலி பிரபலமாகி வருகிறது. குறிப்பிட்ட சில நாட்களிலேயே அரட்டை செயலியை பதிவிறக்கம் செய்தவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் வாட்ஸ்அப் பயனாளர்களை இழக்காமல் இருக்க வாட்ஸ்அப் நிறுவனம் தற்போது புதுப்புது அம்சங்களைக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் மத்தியில் இதற்கு கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து மேலும் பல அம்சங்களைக் கொண்டுவர இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.