

தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவை உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் மூலம் மறைமுகமாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். பொதுவாக இவர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் என்று கூறப்படுகிறது. அப்படி சமீபத்தில் தேர்வு செய்யப்பட்ட தமிழக எம்பிக்கள் இன்று மாநிலங்கள் அவையில் உறுப்பினராக பதவியேற்றனர். இவர்கள் 2025 முதல் 2032 வரை பதவி வகிப்பார்கள் எனத் தெரிகிறது.
திமுக சார்பில் திருச்சி சிவா மற்றும் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் அதிமுக சார்பில் எம். தம்பிதுரை , தேமுதிக சார்பில் எல்.கே. சுதீஷ் , காங்கிரஸ் சார்பில் எம். கிறிஸ்டோபர் திலக் , பாமக சார்பில் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் இன்று மாநிலங்களவைத் தலைவர் சிபி இராதாகிருஷ்ணன் முன்னிலையில் உறுதிமொழி எடுத்து பதவி ஏற்றனர்.
இந்த பதவியேற்பில் ஒவ்வொருவரும் அவரவர் கட்சியின் தனித்தன்மையுடன் எடுத்த உறுதி மொழிகளில் சில சுவாரஸ்யங்களும் நடைபெற்றதாக சொல்லப்படுகிறது.
இதில் தேமுதிக சார்பில் அதன் பொருளாளர் சுதீஷ் முதல் முறையாக மாநிலங்களவை எம்பியாக பதவி ஏற்பது குறிப்பிடத்தக்கது . முன்னதாக அவர் தோளில் அணிந்திருந்த துண்டு விதிமுறையை மீறியது என எடுக்க சொல்லி அறிவுறுத்தப்பட்டதால் அதை அகற்றினர். மேலும் அவரது சட்டையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் புகைப்படம் இருந்தது. ஆனால் அதை அகற்ற விரும்பாமல் அப்படியே பதவி ஏற்க அனுமதிக்குமாறு முன்னதாக அவைத் தலைவரிடம் கேட்டு அனுமதி பெற்றதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் சுதீப் உணர்வு பிரவாகத்துடன் பதவி ஏற்றது குறிப்பிடத்தக்கது .மேலும் மக்களவைத் தலைவர் சிபி ராதாகிருஷ்ணன் தமிழர் என்பதால் பதவியேற்றவர்களுக்கு அவர் தமிழிலேயே நன்றி கூறியதும் பதவி ஏற்றவர்கள் உறுதிமொழிகளை தமிழில் எடுத்துரைத்ததும் குறிப்பிடத்தக்கது .
தமிழ்நாட்டிடின் பிரதிநிதிகளாக நமது பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத் தரும் வகையில் செயலாற்றப் போகும் தமிழக எம்பிக்கள் பலரது வாழ்த்து களையும் பெற்று வருகின்றனர்.