குட் நியூஸ் சொன்ன ரிசர்வ் வங்கி..! இனி 3 மணி நேரத்தில் காசோலையை பணமாக்கலாம்..!

 மத்திய ரிசர்வ் வங்கி
மத்திய ரிசர்வ் வங்கி
Published on

ஒரு காசோலையை டெபாசிட் செய்ய பொதுவாக 2 வேலை நாட்கள் ஆகும், இருப்பினும் சூழ்நிலைகளைப் பொறுத்து அதிகமாகவோ அல்லது குறைவாகவோ நேரம் ஆகலாம். உதாரணமாக, அரசாங்க காசோலைகளை டெபாசிட் செய்ய 1 வேலை நாள் மட்டுமே ஆகலாம். சி.டி.எஸ். முறையில் காசோலைகளை சுழற்சி செய்ய விதிமுறைகளின் படி நடவடிக்கை எடுக்க அவ்வளவு அவகாசம் தேவைப்படுகிறது.

இதையடுத்து ரிசர்வ் வங்கி, சி.டி.எஸ். முறையில் சில மாற்றங்களை கொண்டு வருகிறது. அதாவது ‘ஆன்ரியலைசேசன் சென்டில்மென்ட்’ முறையில் மாற்ற முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான சுற்றறிக்கையை ரிசர்வ் வங்கி வெளியிட்டு உள்ளது.

இந்தத் திட்டம் இரண்டு கட்டங்களாக அமல்படுத்தப்பட உள்ளது.

முதல்கட்டம் அக்டோபர் 4-ந் தேதி முதலும், இரண்டாம் கட்டம் வருகிற ஜனவரி 3-ந் தேதி முதலும் செயல்பாட்டுக்கு வருகிறது.

இதையும் படியுங்கள்:
மக்களே உஷார்..! இப்படி கூட பண மோசடி நடக்குமா ?அதிர்ச்சியில் காவல்துறை!
 மத்திய ரிசர்வ் வங்கி

இந்த விதிமுறைகளின்படி வங்கிகளால் பெறப்பட்ட காசோலைகள் உடனடியாகவும், தொடர்ச்சியாகவும் வங்கிகளால் ஸ்கேன் செய்யப்பட்டு தீர்வு மையத்துக்கு அனுப்பப்படும். பின்னர் வழங்கப்பட்ட ஒவ்வொரு காசோலைக்கும் வங்கி நேர்மறையான உறுதிப்படுத்தல் அல்லது எதிர்மறை உறுதிப்படுத்தலை உருவாக்கும்.

இதன் மூலம் அன்றைய தினம் மாலை 4 மணிக்குள் பெறப்படும் காசோலைகள் அன்று இரவு 7 மணிக்குள் பணம் பெறும் வங்கிகளால் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

2-வது கட்டத்தில் (ஜனவரி 3, 2026 முதல்), காசோலைகளை உறுதிப்படுத்தும் கால அவகாசம் 3 மணி நேரமாகக் குறைக்கப்படும். இந்தப் புதிய நடைமுறையால் காசோலை பரிவா்த்தனை மிகவும் வேகமாகவும், எளிதாகவும் நடக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது..

இந்த மாற்றங்கள் குறித்து வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் தெளிவுபடுத்த ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com