

2026ஆம் ஆண்டு தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவின் பொழுது திருமணம் முடிந்த கையுடன் மணக்கோலத்தில் புதுமண தம்பதியினர் வாக்களித்த நிகழ்வு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
இன்று நடைபெறும் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் நாமக்கல்லில் திருமணம் முடிந்த கையுடன் புதுமணத் தம்பதியினர் தாலி கட்டிய அலங்காரத்துடன் வாக்குச்சாவடிக்கு நேரில் வந்து தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றினர்.
இந்த தம்பதியினர் திருமண விழா கொண்டாட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்காமல், வாக்களிக்கும் ஜனநாயக கடமைக்கு முக்கியத்துவம் அளித்தது பொதுமக்களிடையே நெகிழ்ச்சியையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தியது.