ஆப்ரிக்க நாடான கென்யா நெய்ரி நகரில் ஹில்சைட் எண்டர்சா என்ற பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு, பயிலும் மாணவர்களுக்கான விடுதியில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டு, 17 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே தீயில் கருகி உயிரிழந்துள்ளனர். 14 மாணவர்கள் பலத்த காயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலரது நிலைமை கவலைகிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தில் உள்ள போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் விண்கலம் மட்டும், வானிலையைப் பொறுத்து நாளை பூமிக்குத் திரும்பும் என நாசா தெரிவித்துள்ளது. விண்வெளிக்கு சென்ற சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஸ்பேஸ்எக்ஸ் விண்கலம் மூலம் பூமிக்குத் திரும்புவார்கள் எனவும் அறிவித்துள்ளது.
நாளை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை மாநகரம் முழுவதும் ஆயிரத்து 519 விநாயகர் சிலைகளை அமைக்க காவல்துறை அனுமதி அளித்துள்ளது. பாதுகாப்பு பணியில் 16 ஆயிரத்து 500 போலீசார், 2 ஆயிரம் ஊர்க்காவல் படையினரை ஈடுபடுத்த படுவார்கள் என கூறப்படுகிறது.
'கங்குவா' திரைப்படம் அக்டோபர் 10-ம் தேதி திரைக்கு வரூம் என படக்குழு அறிவித்திருந்த நிலையில், அன்று ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் வேட்டையன் திரைப்படம் வெளியாக இருப்பதால் 'கங்குவா' அன்று வெளியாகவில்லை என படக்குழு அறிவித்துள்ளது.
'கங்குவா' திரைப்படம் தீபாவளி அன்று வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், தீபாவளி அன்று சிவகார்த்திகேயனின் 'அமரன்' மற்றும் நெல்சன் தயாரிப்பில் 'ப்ளடி பெக்கர்' படங்கள் திரைக்கு வருவதால், 'கங்குவா' திரைப்படம் தீபாவளி அன்றும் வெளியாகாது. மாறாக நவம்பர் 2வது வாரத்தில் வெளியாகலாம் என 'கங்குவா' படக்குழு அறிவித்துள்ளது.
காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர் மல்யுத்த வீரர்கள் விக்னேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா. இந்நிலையில், விக்னேஷ் போகத் தனது ரயில்வே பணியை ராஜினாமா செய்துள்ளார். மேலும் ஹரியானா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், இந்த வீரர்கள் இருவரும் காங்கிரஸ் சார்பில் போட்டியிட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.