News 5 - (10-07-2024) ரஷ்ய பயணத்தை முடித்து, ஆஸ்திரியா சென்ற பிரதமர் மோடி!

News 5
News 5
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

1. ரஷ்ய பயணத்தை முடித்து, ஆஸ்திரியா சென்ற பிரதமர் மோடி!

PM MODI
PM MODI

ரஷ்ய பயணத்தை முடித்து, ஆஸ்திரியா சென்றுள்ளார் பிரதமர் மோடி. அங்கு ஆஸ்திரியா நாட்டு இசைக்கலைஞர்கள், நமது தேசிய கீதத்தை இசைத்து மோடியை வரவேற்றுள்ளனர். அதன்பின், பிரதமர் மோடி ஆஸ்திரிய நாட்டு அதிபர் சான்சிலர் கார்ல் நெஹமருடன், இரு நாட்டு உறவு, வர்த்தகம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

2. திரிபுரா HIV பாதிப்பு குறித்து மாநில அரசு விளக்கம்!

HIV
HIV

திரிபுராவில் ஒரு கல்லூரியில் 800 மாணவர்களுக்கு HIV தொற்று கண்டறியப்பட்டு, அதில் 47 பேர் உயிரிழந்ததாக சமூக வலைதளங்களில் தவறான செய்திகள் பரவி வருகின்றன என மாநில அரசு விளக்கம் அளித்துள்ளது. ஆனால், திரிபுராவில் 2007 முதல் தற்போது வரை 828 மாணவர்கள் HIV தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்; அதில் 47 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதே சரி.

3. மெரினா கடலலையில் சிக்கிய சிறுவர்கள்!

merina
merina

மெரினா கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்த 2 சிறுவர்கள் கடல் அலையில் சிக்கியுள்ளனர். அதை அறிந்த மெரினா மீட்புக் குழுவினர் உடனடியாக கடலுக்குள் சென்று இருவரின் உயிரையும் காப்பாற்றி சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

4. 'தங்கலான்' படத்தின் ட்ரெய்லர் வெளியானது!

thangalaan
thangalaan

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், பசுபதி, பார்வதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘தங்கலான்' படத்தின் ட்ரெய்லர் வெளியானது. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம், அக்டோபர் 10ம் தேதி திரைக்கு வருவதாக கூறப்படுகிறது.

5. 7வது இடத்தை பிடித்தார் இந்திய வீரர் ருதுராஜ் கெய்க்வாட்!

Ruturaj
Ruturajcredits to health keeda

ஐசிசியின் டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் 13 இடங்கள் முன்னேறி, 7வது இடத்தை பிடித்தார் இந்திய வீரர் ருதுராஜ் கெய்க்வாட். இப்பட்டியலில் 2வது இடத்தில் சூர்யகுமார் நீடிக்கிறார். தற்போது டாப் 10 வீரர்களில் 2 இந்திய வீரர்கள் உள்ளதாக கூறப்படுகிறது.