இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காஸா பகுதியை ஆளும் ஹமாஸ் அமைப்பினருக்கும், 2023 அக்டோம்பர் 7 முதல் போர் நடந்து வருகிறது. காஸாவில் இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில், இதுவரை பெண்கள், குழந்தைகள் உட்பட, 40,000-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இன்று(செப்டம்பர் 10) காஸாவின் தெற்கு நகரமான கான் யூனிஸ் பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 40 பேர் உயிரிழந்துள்ளனர். 60 பேர் காயமடைந்துள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைகிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
நாடு முழுவதும் பொது மக்களுக்கு ஆதார் அட்டை போல் விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. "விவசாயிகள் பற்றிய தனிப்பட்ட தரவுகள் இல்லை என்பதால், அந்த குறையை போக்கும் வகையில் இந்த திட்டம் இருக்கும். விவசாயிகள் பெயர்களை பதிவு செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும்" என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இத்திட்டத்தின் மூலம் பல்வேறு வேளாண் திட்டத்தின் பயன்களை விவசாயிகள் பெற முடியும் என்று டெல்லியில் நடந்த வேளாண் தொழில்நுட்ப உச்சி மாநாட்டில் வேளாண் துறை செயலாளர் தெரிவித்துள்ளார். மேலும் மார்ச் மாதத்திற்குள் 5 கோடி பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட இருப்பதாகத் தகவல் கூறப்படுகிறது.
பெரிய வெங்காயம் தமிழகத்திற்கு கர்நாடகா, ஆந்திரா மற்றும் மஹாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
தற்போது கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களில், கனமழை பெய்து வருவதால், அங்கு பெரிய வெங்காயம் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்துக்கு கொண்டு வரப்படும் வெங்காயத்தின் அளவு பாதியாக குறைந்துள்ளாதால் விலை உயர்ந்துள்ளது.
அந்த வகையில், கோவை காய்கறி மொத்த மார்க்கெட்டில், ஒரு கிலோ பெரிய வெங்காயம், 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
முதல்முறையாக வெங்கட்பிரபு இயக்கத்தில், விஜய் நடித்த 'தி கோட்' திரைப்படம் 5 நாட்களில் ரூ 300 கோடியை தாண்டி வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் யு.எஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடந்துவருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஃபைனலில் இத்தாலியின் ஜானிக் சின்னர், அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் மோதினர்.
இதில், ஜானிக் சின்னர் 6-3, 6-4, 7-5 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, யு.எஸ் ஓபனில் முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றுள்ளார்.
சின்னர் ரூ.30 கோடி பரிசுத் தொகையும், இரண்டாவது இடம் பிடித்த பிரிட்ஸ், ரூ. 15 கோடி பரிசு தொகையும் பெற்றுள்ளனர்.