News 5 – (10.10.2024) ரத்தன் டாடா மறைவுக்கு ஒரு நாள் துக்கம் அனுசரிப்பு!

News 5
News 5

1. லெபனான் மீது இஸ்ரேல் வெடிகுண்டு தாக்குதல்!

Israel bomb attack on Lebanon
Lebanon

சிரியா மற்றும் லெபனான் மீது இஸ்ரேல் கடுமையான வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில் லெபனானில் 5 மருத்துவர்கள், 7 மாதக் குழந்தை உள்பட மூன்று சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.

2. ரத்தன் டாடா மறைவுக்கு ஒரு நாள் துக்கம் அனுசரிப்பு!

One day mourning for Ratan Tata's demise
Ratan Tata

தொழிலதிபர் ரத்தன் டாடா மறைவுக்கு ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது. அதாவது, அரசு விழாக்கள் எதுவும் நடைபெறாது எனவும், அரசுக் கட்டடங்களில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் எனவும் அறிவித்துள்ளது.

3. மாநில அரசுகளுக்கான நிதி பகிர்வு!

Money
Money

மாநில அரசுகளுக்கான நிதி பகிர்வாக மத்திய அரசு 1,78,173 கோடி ரூபாயை விடுவித்ததுள்ளது. இதில் அதிகபட்சமாக உத்தரப்பிரதேத்திற்கு 31,962 கோடி ரூபாயும், தமிழ்நாட்டிற்கு 7,268 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
News 5 – (10.10.2024) ரத்தன் டாடாவின் இறுதிச் சடங்குகள் முழு அரசு மரியாதையுடன் நடைபெறும்!
News 5

4. 'இண்டர்ஸ்டெல்லர்' திரைப்படம் ரீ-ரிலீஸ்!

'Interstellar' movie re-release
'Interstellar' movie

கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் 2014ம் ஆண்டு வெளியான 'இண்டர்ஸ்டெல்லர்' திரைப்படம் டிசம்பர் 6ம் தேதி மீண்டும் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆக இருக்கிறது.

5. 20,000 ரன்களைக் கடந்த முதல் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட்!

Joe Root is the first English player to cross 20,000 runs
Joe Root

ர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 20,000 ரன்களைக் கடந்த முதல் இங்கிலாந்து வீரர் என்ற சாதனையை படைத்தார் ஜோ ரூட். உலகளவில் 20,000 ரன்களைக் கடந்த 13வது வீரர் என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com