News 5 – (10.10.2024) ரத்தன் டாடாவின் இறுதிச் சடங்குகள் முழு அரசு மரியாதையுடன் நடைபெறும்!

News 5
News 5

1. லாவோஸ் சென்றார் பிரதமர் மோடி!

Prime Minister Modi went to Laos
Prime Minister Modi

ரண்டு நாள் பயணமாக லாவோஸ் நாட்டிற்கு புறப்பட்டுச் சென்றார் பிரதமர் மோடி. அங்கு ஆசியான் - இந்தியா உச்சி மாநாட்டிலும், கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டிலும் பங்கேற்க உள்ளார்.

2. ரத்தன் டாடாவின் இறுதிச் சடங்குகள் முழு அரசு மரியாதையுடன் நடைபெறும் - மகாராஷ்டிர அரசு அறிவிப்பு!

Ratan Tata
Ratan Tata

டாடா குழுமத்தின் முன்னாள் தலைவரான தொழிலதிபர் ரத்தன் டாடா காலமானார். மும்பை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் காலமானார். இந்நிலையில், ரத்தன் டாடாவின் இறுதிச் சடங்குகள் முழு அரசு மரியாதையுடன் நடைபெறும் என மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது. மேலும், இன்று மாலை 4 மணி வரை பொதுமக்கள் அஞ்சலி செலுத்தலாம் எனவும் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

3. நாளை ஆயுத பூஜையை முன்னிட்டு, பூக்களின் விலை கடும் உயர்வு!

Ahead of Ayudha Puja tomorrow, the price of flowers will rise
Ayudha Puja flowers

யுத பூஜை கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ள நிலையில், பூக்களின் விலை பல மடங்காக உயர்ந்துள்ளது. 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ மல்லிகைப்பூ இன்று 1000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
News 5 – (09.10.2024) 'வேட்டையன்' திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி!
News 5

4. பிரம்மாண்டமாக வெளியான 'வேட்டையன்' திரைப்படம்!

Rajini's Vettaiyan
Rajini's Vettaiyan

ஜினிகாந்த், அமிதாப்பச்சன், ஃபக்த் ஃபாசில், மஞ்சு வாரியர் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியுள்ள 'வேட்டையன்' திரைப்படம் திரையரங்குகளில் இன்று பிரம்மாண்டமாக வெளியாகி உள்ளது. அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளிலும் இன்று 'வேட்டையன்' திரைப்படம் வெளியானது. மிகுந்த எதிர்ப்பார்ப்புடன், ஆட்டம் பாட்டம் கொண்ட்டாட்டம் என  ரசிகர்கள் இந்தத் திரைப்படத்தைக் காணச் சென்றுள்ளனர்.

5. மகளிர் டி20 கிரிக்கெட்: இலங்கையை வீழ்த்தி இந்திய அணி வெற்றி!

Indian team won by defeating the Sri Lankan team
India t20 womens team

களிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இலங்கை அணியை 82 ரன்கள் வித்தியாசத்தில் எளிதில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இந்திய அணி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com