தென்கொரிய பெண் எழுத்தாளர் 'ஹான்காங்' என்பவருக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. மனித வாழ்க்கைக் குறித்த கவிதைக்காக ஹான்காங்கிற்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்படவுள்ளது.
லடாக் பகுதியில் கட்டப்பட்டுள்ள உலகின் மிக உயரமான Cherenkov தொலைநோக்கி தற்போது திறக்கப்பட்டடுள்ளது. Major Atmospheric Cherenkov Experiment (MACE) எனப் பெயரிப்பட்டுள்ள அந்தத் தொலைநோக்கி, Gama கதிர்களைப் பற்றி புரிந்துகொள்வதற்கு உதவுவதோடு, பிரபஞ்சத்தில் நிகழும் சூப்பர்நோவாக்கள், கருந்துளைகள் மற்றும் காமா-கதிர் வெடிப்புகள் போன்றவற்றை புரிந்துகொள்ளவும் வழிவகுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4,300 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள அந்தத் தொலைநோக்கி, இந்திய எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் (ECIL) மற்றும் பாபா அணு ஆராய்ச்சி மையத்தால் (BARC) கட்டப்பட்டுள்ளது. இது ஆசியாவின் மிகப்பெரிய Imaging Cherenkov Telescope என்ற பெருமையையும் பெற்றுள்ளது.
தமிழகத்தில் வரும் 15ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், கனமழை எச்சரிக்கையையொட்டி முன்னேற்பாடுகளைத் தீவிரப்படுத்த அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.
அதில், பேரிடர்களை கையாள்வதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க உத்தரவு விடுக்கப்பட்டுள்ளது. போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்வதோடு, மோட்டார் உள்ளிட்டவற்றை தயார் நிலையில் வைத்திருக்கவும் அறிவுறுத்தியுள்ளது.
விமல் நடிப்பில் உருவாகியுள்ள 'சார்' திரைப்படம் இம்மாதம் 18ம் தேதியன்று வெளியாகவுள்ள நிலையில், இந்தப் படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
சமீபத்தில் இந்தியா, வங்கதேசம் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று முடிந்தது. அதில், இந்தியா தொடர்ந்து அபாரமாக செயல்பட்டு, தொடரைக் கைப்பற்றியது. அதையடுத்து, இம்மாதம் 16ம் தேதி முதல், இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறும். இத்தொடர், நவம்பர் 5ம் தேதி நிறைவு பெறும்.
அதைத் தொடர்ந்து, இந்திய அணியானது ஆஸ்திரேலியா சென்று 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. இந்த 5 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா, 2 வெற்றிகளை பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 22ம் தேதி துவங்கும். அடுத்து, டிசம்பர் 6, 14, 26 மற்றும் ஜனவரி 6 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்நிலையில், தனிப்பட்ட காரணங்களுக்காக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் அல்லது 2வது போட்டியில் ரோஹித் ஷர்மா பங்கேற்க மாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.