News 5 – (11.10.2024) டாடா அறக்கட்டளையின் தலைவராக நோயல் டாடா நியமனம்!

News 5
News 5

1. 2024ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு!

2024 Nobel Peace Prize
Nihon Hidankyo

2024ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு ஜப்பானை சேர்ந்த 'நிஹோன் ஹிடான்கியோ' என்ற அமைப்புக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அணு ஆயுதங்கள்யில்லா உலகை அடைவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுவரும் சீரிய பணிக்காக இந்த நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

2. டாடா அறக்கட்டளையின் தலைவராக நோயல் டாடா நியமனம்!

Noel Tata appointed as Chairman of Tata Trust
Ratan tata with Noel Tata

டாடா அறக்கட்டளையின் தலைவராக, ரத்தன் டாடாவின் சகோதரர் நோயல் டாடா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  ரத்தன் டாடாவின் மறைவைத் தொடர்ந்து, மும்பையில் நடைபெற்ற டாடா அறக்கட்டளை நிர்வாகிகள் கூட்டத்தில் ஒருமனதாக இவர் தேர்வு செய்யப்பட்டார்.

3. சென்னைக்கு ஆரஞ்ச் அலர்ட்!

Rain
Rain

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு வரும் 15ம் தேதியன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வரும் 14ம் தேதியும் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 11 மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதையும் படியுங்கள்:
News 5 – (11.10.2024) ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோஹித் ஷர்மா பங்கேற்க மாட்டார் எனத் தகவல்!
News 5

4. டோரிமான் கார்ட்டூனுக்கு குரல் கொடுத்தவர் காலமானார்!

Nobuyo Oyama, cartoon character Torimon
Nobuyo Oyama, cartoon character Torimon

குழந்தைகளிடையே மிகவும் பிரபலமான டோரிமான் கார்ட்டூன் கதாபாத்திரத்துக்குக் குரல் கொடுத்த ஜப்பான் நடிகை நோபுயோ ஓயாமா காலமானார். வயது மூப்பு காரணமாக 90வது வயதில் இவர் காலமானதாக அறிவித்துள்ளனர்.

5. மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி!

West Indies women's team
West Indies women's team

க்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ) பெண்களுக்கான ஐ.சி.சி 'டி20' உலகக் கோப்பை கிரிக்கெட் 9வது சீசன் நடைபெற்று வருகிறது. சார்ஜாவில் நடைபெற்ற 'பி' பிரிவு லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம் அணிகள் மோதின. இந்தப் போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட்க்ள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com