உக்ரைன் மீது நீண்ட நாட்களாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. மேற்கத்திய நாடுகள் உதவியுடன் இதற்கு உக்ரைன் பதிலடி கொடுத்து வருகிறது. இந்தச் சூழ்நிலையில் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வர, ரஷ்யாவிற்குள் நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை வழங்கும்படி அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கேட்டுக்கொண்டார்.
இந்த நேரத்தில், ரஷ்ய அதிபர் புடின் ''நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்த உக்ரைனை அனுமதித்தால், அது மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவுடன் நேரடியாக மோதுவதற்கு சமம் '' என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான பாராட்டு விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி, "தமிழகத்தில் Phd கல்வியின் தரத்தை மேம்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. அதிக எண்ணிக்கையில் Phd படித்தவர்கள் இருந்தாலும் Phdயின் தரம் திருப்திகரமாக இல்லை. மாணவர்கள் முதுகலை செல்லும் போதே NET, JRF தேர்வு எழுத அறிவுறுத்தப்பட வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.
திண்டுக்கல்லில் 2 குழந்தைகள், 2 பெரியவர்கள் என 4 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அவர்களை தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த 4 பேர் லேசான காய்ச்சலுடன் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு வந்தபோது, இரத்த பரிசோதனையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதியானது.
நடிகர் சிம்பு, நடிகை நயன்தாரா ஆகியோரின் எக்ஸ் தள கணக்குகள் ஹேக் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏனெனில், நடிகை நயன்தாரா “தனது எக்ஸ் பக்கத்தில், வினோதமான பதிவுகள் வெளியானால் அதைக் கண்டுகொள்ள வேண்டாம்" என அறிவித்திருந்தார். மேலும், சிம்பு தனது எக்ஸ் தள பக்கத்தில், ‘ஃபாலோயர்களிடம் கிரிப்டோ கரன்ஸி பயன்படுத்துவீர்களா?’ எனக் கேள்வி கேட்டு பதிவிட்டிருந்ததால் சிம்புவின் X கணக்கும் ஹேக் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் இடையே இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. முதல் டெஸ்ட், இம்மாதம் 19ல் சென்னை, சேப்பாக்கத்தில் துவங்குகிறது. இரண்டாவது போட்டி கான்பூரில் செப்டம்பர் 27 முதல் அக்டோம்பர் 1ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.