News 5 – (18.09.2024) கண்களைக் கவரும் குறிஞ்சி மலர்கள்!

News 5
News 5

1. ‘பிரதமர் மோடியை சந்திக்க விரும்புகிறேன்‘:  டொனால்டு டிரம்ப்!

Donald Trump
Donald Trump

ந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் 'குவாட்' அமைப்பின் மாநாடு, அமெரிக்காவின் டெல்வாரே நகரில் நடைபெற உள்ளது. ஜோ பைடன் தலைமையில் நடைபெற உள்ள இம்மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி வரும் 21ம் தேதி அமெரிக்கா செல்கிறார். இந்நிலையில், "அடுத்த வாரம் அமெரிக்கா வரும் பிரதமர் மோடியை சந்திக்க விரும்புகிறேன்" என அமெரிக்கா முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

2. இண்டிகோ விமானத்தின் பைலட் சஸ்பெண்ட்!

IndiGo pilot suspended
IndiGo pilot suspended

டெல்லியில் கடந்த வாரம் விமான நிலைய ஓடுபாதையில் விமானத்தின் வால் பகுதி உராய்ந்ததால் இண்டிகோ விமானத்தின் பைலட் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.  டெல்லியில் இருந்து பெங்களூருக்கு அந்த விமானம் புறப்பட்டபோது ஒடுபாதையில் உராய்ந்து நீல நிறத்தில் இருந்த விமானத்தின் வால் பகுதி வெள்ளை நிறமாக மாறியது.

3. கண்களைக் கவரும் குறிஞ்சி மலர்கள்!

 Kurunji flowers
Kurunji flowers

நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி மலர்கள் தற்போது பூத்துக் குலுங்கின்றன. இது காண்போரின் கண்களைக் கவர்ந்து வருகிறது. நீல நிறத்திலான குறிஞ்சி மலர்களால் ரம்மியமாகக் காட்சியளிக்கும் மலைப்பகுதியை பார்வையாளர்கள் கண்டு ரசித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்:
பூமியை கடந்துச் சென்ற சிறுகோள்… ஆனால் மீண்டும் வரும் என்று நாசா எச்சரிக்கை!
News 5

4. 'பேட்ட ராப்' திரைப்படத்தின் பாடல் வெளியீடு!

'Petta Rap' movie
'Petta Rap' movie

லையாள இயக்குநர் எஸ்.ஜே.சினு இயக்கத்தில் பிரபுதேவா கதாநாயகனாக நடிக்கும் ‘பேட்ட ராப்’ திரைப்படம் செப்டம்பர் 27ம் தேதி வெளியாகும் நிலையில், தற்போது பேட்ட ராப் Remix songஐ படக்குழு வெளியிட்டுள்ளது. புளூ ஹில் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு டி.இமான் இசையமைத்திருக்கிறார்.

5. நாளை தொடங்கவுள்ள டெஸ்ட் போட்டிக்கு நாளைதான் டிக்கெட் விற்பனை!

Test match between India and Bangladesh ticket
Test match between India and Bangladesh ticket

ந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி நாளை தொடங்கவுள்ள நிலையில், இதற்கான தினசரி டிக்கெட்டுகள், அந்தந்த நாளன்று காலை 7 மணி முதல் விற்பனை செய்யப்படும் என TNCA அறிவித்துள்ளது. குறைந்தபட்ச விலையாக ஒரு டிக்கெட்டின் விலை 200 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com