News 5 – (19-08-2024) புதிய திரைப்படத்தில் நடிக்கிறார் சூரி!

News 5
News 5

1. ரஷ்யா போர் தொடுத்த பிறகு முதல் முறையாக பிரதமர் மோடி உக்ரைனுக்கு பயணம்!

Prime Minister Modi visits Ukraine for the first time after the war with Russia!
Prime Minister Modi visits Ukraine for the first time after the war with Russia!

இந்த மாத இறுதிக்குள் பிரதமர் மோடி உக்ரைனுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக வெளியுறவுத்துறை  அமைச்சகம் (Ministry of External Affairs) தகவல் தெரிவித்துள்ளது.

2. இன்று முதல் வெளி நோயாளிகள் பிரிவு காலை 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே இயங்கும் - ஜிப்மர் அறிவிப்பு!

JIPMER
JIPMER

கொல்கத்தாவில் பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து தொடர் போராட்டம் நடந்து வரும் நிலையில், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் இன்று முதல் வெளி நோயாளிகள் பிரிவு காலை 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவசரமற்ற அல்லது நீண்டகால நோய்க்கு சிகிச்சை பெறுவோர் வெளிப்புற நோயாளிகள் பிரிவுக்கு வருவதை தவிர்க்க வேண்டும். அவசரப்பிரிவு சேவைகள் வழக்கம் போல் இயங்கும், உயிர்காக்கும் பராமரிப்பு தேவைப்படும் நோயாளிகளுக்கும் உரிய சிகிச்சை அளிக்கப்படும் எனவும் ஜிப்மர் மருத்துவமனை அறிவித்துள்ளது.

3. தி.மு.க.வுக்கு எதிராக பிரேமலதா விஜயகாந்த் கருத்து!

premalatha vijayakanth
premalatha vijayakanth credits to dtnext

"தி.மு.க. வுக்கு தேவை என்றால் பா.ஜ.க.வை அரவணைத்து கொள்வார்கள். தேவையில்லை என்றால் --- என்பார்கள். 100 ரூபாய் நாணயம் வெளியிடுவதில் காட்டும் ஈடுபாட்டை மக்கள் பிரச்சனைகளில் முதலமைச்சர் காட்ட வேண்டும்" என பிரேமலதா விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.

4. புதிய திரைப்படத்தில் நடிக்கிறார் சூரி!

soori new movie Directed by Prashant Pandyaraj
soori new movie Directed by Prashant Pandyaraj

கருடன், கொட்டுக்காளி படங்களைத் தொடர்ந்து புதிய திரைப்படத்தில் நடிக்கிறார் சூரி. 'புரூஸ் லீ' திரைப்பட இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில், நடிகர் சூரி புதிய படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

5. "கோலி போல் ஆக வேண்டும் என்பதே என் ஆசை" - துருவ் ஜூரல்!

"I want to be like Kohli" - Dhruv Jural!
"I want to be like Kohli" - Dhruv Jural!

“விராட் கோலியுடன் இருக்கும்போது அவரின் எனர்ஜியை நம்மால் உணரமுடியும். 16 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடி வருகிறார். எப்போதும் விளையாட்டில் ஆதிக்கம் செலுத்துகிறார். கோலி போல் ஆக வேண்டும் என்பதே என் ஆசை” என விராட் கோலியை பாராட்டி இந்திய கிரிக்கெட் வீரர் துருவ் ஜூரல் கூறியுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com