News 5 – (19.10.2024) தீபாவளிக்கு மறுநாளும் அரசு விடுமுறை!

News 5
News 5
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

1. தீபாவளிக்கு மறுநாளும் அரசு விடுமுறை!

M.K.Stalin
M.K.Stalin

இம்மாதம் 31ம் தேதி வியாழக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இப்பண்டிகையை முன்னிட்டு பலரும் தங்கள் சொந்த ஊருக்கு சென்று தங்கள் உறவினரோடு மகிழ்ச்சியாக இந்நாளைக் கழிப்பர். தீபாவளி பண்டிகையான வியாழக்கிழமையன்று அரசு விடுமுறை. சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்புவோர் நலனை கருத்தில் கொண்டு, தீபாவளிக்கு மறுநாள் நவம்பர் 1ம் தேதி வெள்ளிக்கிழமையும் அரசு விடுமுறை வழங்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நவம்பர் 1ம்தேதி விடுமுறையை ஈடு செய்ய தொடர்ந்து வரும் நவம்பர் 9ம் தேதி அன்று பணி நாளாக அறிவித்தும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

2. தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கு ஒத்திவைப்பு!

Actor Dhanush and Aishwarya Rajinikanth
Actor Dhanush and Aishwarya Rajinikanth

நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா தம்பதியர் விவாகரத்து கோரிய வழக்கு விசாரணை நவம்பர் 2ம் தேதிக்கு ஒத்திவைப்பு. இருவரும் 2வது முறையாக நீதிமன்றத்தில் ஆஜராகாததால் சென்னை குடும்ப நல நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

3. ஒரு நாள் முன்பே காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி!

Strom
Strom

வங்கக்கடலில் வரும் 22ம் தேதிக்குப் பதிலாக ஒரு நாள் முன்பே காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது அக்டோபர் 23ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இதையும் படியுங்கள்:
News 5 – (19.10.2024) த.வெ.க. கட்சி மாநாட்டில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள்!
News 5

4. ‘சொர்கவாசல்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

The first look of the movie 'Sorgavasal'
'Sorgavasal' movie

அறிமுக இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில், RJ பாலாஜி நடிக்கும் ‘சொர்கவாசல்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டது படக்குழு.

5. தோனியின் சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்!

Rishabh Pant
Rishabh Pant

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 2500 ரன்களை, குறைந்த இன்னிங்ஸில் கடந்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற தோனியின் சாதனையை ரிஷப் பண்ட் முறியடித்தார். 69 இன்னிங்ஸ்களில் 2500 டெஸ்ட் கிரிக்கெட் ரன்களை தோனி கடந்திருந்த நிலையில், இதனை 62 இன்னிங்ஸ்களிலேயே கடந்துள்ளார் ரிஷப் பண்ட்.