அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை திட்டவட்டமாக நிராகரித்தார் எலான் மஸ்க். ‘தமது தாத்தா அமெரிக்கராக இருந்தாலும், தான் தென் ஆப்பிரிக்காவில் பிறந்ததால் அதிபர் தேர்தலில் போட்டியிடத் தனக்குத் தகுதியில்லை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
மத்தியக் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகி உள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று தாழ்வு மண்டலமாகவும், நாளை புயலாகவும் மாறக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. ஒடிசாவின் புரி மற்றும் மேற்கு வங்கத்தில் உள்ள சாகர் தீவுக்கு இடையே இது கரையைக் கடக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தரப்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தப் புயலுக்கு 'டானா' என கத்தார் நாடு பெயர் சூட்டி இருக்கிறது.இந்நிலையில், இந்தப் புயலால் தமிழகத்துக்கு எவ்வித பாதிப்பும் இல்லை எனவும் புயலை எதிர்கொள்ளும் வகையில் ஒடிசா, மேற்கு வங்கம் மாநிலங்களில் 25 தேசிய பேரிடர் மீட்புக்குழுக்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'வந்தே பாரத்' ரயில்களுக்கு இணையாக, ஏ.சி. இல்லாத முன்பதிவுப் பெட்டிகள் மற்றும் பொதுப்பெட்டிகளுடன் கூடிய 'அம்ரித் பாரத்' ரயில்கள் இயக்கம் கடந்த ஜனவரி மாதம் துவங்கியது. நடப்பாண்டு இறுதிக்குள் நாடு முழுதும், 26 'அம்ரித் பாரத்' ரயில்கள் இயக்கத்துக்குக் கொண்டு வரப்பட உள்ளன. திருநெல்வேலி - ஷாலிமர், தாம்பரம் - சந்திரகாசி என இரு வழித்தடங்களில் இந்த ரயில்கள் இயங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
அட்டக்கத்தி தினேஷ் நடிக்கும் 'தண்டகாரண்யம்' திரைப்படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகும் என அப்படக்குழு அறிவித்துள்ளது.
2028ம் ஆண்டு நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் இடம்பெற இருக்கும் கிரிக்கெட் போட்டிகளை நியூயார்க்கில் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.