News 5 – (23.09.2024) ஐஃபோன் வாடிக்கையாளர்களே உஷார்!

News 5
News 5

1. ஐஃபோன் வாடிக்கையாளர்களே உஷார்!

Attention iPhone customers!
Attention iPhone customers

ஃபோன் உள்ளிட்ட ஆப்பிள் நிறுவனத்தின் சாதனங்களில், முக்கியத் தரவுகள் திருடப்படும் ஆபத்து உள்ளதாக மத்திய அரசு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதனால் தேவையான மென்பொருளை மட்டும் உங்கள் ஐஃபோனில் அப்டேட் செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளது.

2. மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் இந்திய அழகி தேர்வு!

Rhea Singha (Miss Universe India beauty)
Rhea Singha (Miss Universe India beauty)

ஜெய்ப்பூரில் நடைபெற்ற அழகிப் போட்டியில், மிஸ் யுனிவர்ஸ் இந்திய அழகியாக 18 வயதான ரியா சிங்கா தேர்வாகியுள்ளார். 2024 பிரபஞ்ச அழகிக்கான போட்டியில் இந்தியாவின் பிரதிநிதியாக ரியா பங்கேற்க உள்ளார்.

3. ‘சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்டப் பணிகளுக்கு மத்திய அரசின் பங்களிப்பு இல்லை’ நிர்மலா சீதாராமன்!

Nirmala Sitharaman
Nirmala Sitharaman

‘சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்டப் பணிகளுக்குரிய செலவுகள் முழுவதும் தமிழக அரசுக்கே உரியது’ என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். 7 ஆயிரத்து 425 கோடி ரூபாய் செலவில் சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்டப் பணிகளை தமிழக அரசே தேர்ந்தெடுத்ததால், மத்திய அரசின் பங்களிப்பு இதில் இல்லை எனவும் விளக்கம் அளித்துள்ளார்.

இதையும் படியுங்கள்:
News 5 – (21.09.2024) இந்தியர்கள் இன்று வானில் நெப்டியூனை பார்க்கலாம்!
News 5

4. விஜய்யின் 'தி கோட்' திரைப்பட வசூல்!

The Goat
The Goat

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் முதன் முறையாக நடித்த, 'தி கோட்' திரைப்படம் செப்டம்பர் 5ம் தேதி வெளியானது. இப்படம் முதல் நாள் மட்டுமே உலகம் முழுவதும் 126 கோடி ரூபாய் வரை வசூல் செய்திருந்தது. அந்த வகையில், படம் வெளியாகி 18 நாட்கள் நிறைவடைந்த நிலையில்,  உலகம் முழுவதும் 420 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக அப்படக்குழு அறிவித்துள்ளது.

5. வங்கதேச அணியை வீழ்த்தி, இந்திய கிரிக்கெட் அணி அபார வெற்றி!

won indian team
Indian team

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணியை வீழ்த்தி, இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. வங்கதேச அணியை 280 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது. 2ஆவது இன்னிங்சில் இந்திய வீரர் ஆர்.அஸ்வின் 6 விக்கெட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இந்த வெற்றிக்குக் காரணமாக இருந்தனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com