News 5
News 5

News 5 – (24.09.2024) சேம்பியன்ஷிப் கார் பந்தயத்தில் AK!

1. காலநிலை மாற்றத்தால் வேகமாகப் பரவும் டெங்கு!

Dengue fever
Dengue fever

துரையில் காலநிலை மாற்றத்தால் ஒரே வாரத்தில் 107 பேருக்கு காய்ச்சல் பாதித்துள்ளது. தற்போது டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 3 சிறுவர்களும் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.

2. மார்ச் மாதத்திற்குள் ஒரு லட்சத்து 19 ஆயிரம் பேருக்குக்குக் கான்க்ரீட் வீடுகள்!

Karunanidhi Dream Home Project
Karunanidhi Dream Home Project

‘கலைஞர் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் மார்ச் மாதத்திற்குள் ஒரு லட்சத்து 19 ஆயிரம் கான்க்ரீட் வீடுகள் பயனாளிகளுக்கு வழங்கப்படும்’ என ஊரக வளர்ச்சித்துறை தகவல் அளித்துள்ளது. 3 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெறும் இந்த கட்டுமானப் பணிகள் 85 சதவீதம் முடிக்கப்பட்டுள்ளதாகவும் அத்துறை விளக்கம் அளித்துள்ளது.

3. வங்கக்கடலில்  காற்றழுத்த தாழ்வுப் பகுதி!

Low pressure area in the Bay of Bengal
Low pressure area in the Bay of Bengal

ங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக் கடலில் இந்தடக் காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்:
'MPox கிளேட் 1பி' வைரஸ் தாக்கிய இந்தியாவின் முதல் நபர்!
News 5

4. சேம்பியன்ஷிப் கார் பந்தயத்தில் AK!

AK in Championship Car Racing
AK in Championship Car Racing

டிகர் அஜித்குமார் 2025 ஐரோப்பியன் GT4 சேம்பியன்ஷிப் கார் பந்தயத்தில் கலந்துகொள்ள திட்டமிட்டுள்ளதாக, இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இதற்காக இங்கிலாந்து, ஐரோப்பா & மத்தியக் கிழக்கு நாடுகளுடன் இது குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

5. ஒரே ஆண்டில் 150 சிக்ஸ் அடித்த ஒரே வீரர்!

Nicholas Pooran
Nicholas Pooran

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் நிக்கோலஸ் பூரன், இதுவரை டி20 கிரிக்கெட் வரலாற்றிலேயே எந்த ஒரு வீரரும் செய்யாத பிரம்மாண்ட சிக்ஸர் சாதனையை செய்து இருக்கிறார். 2024ம் ஆண்டு இதுவரை 151 சிக்ஸ் அடித்து இருக்கிறார். இதன் மூலம் டி20 போட்டிகளில் ஒரே ஆண்டில் 150 சிக்ஸ் அடித்த ஒரே வீரர் என்ற சாதனையைப் படைத்திருக்கிறார்.

logo
Kalki Online
kalkionline.com